ஆண்டிற்கு ஒருமுறை மலையிலிருந்து கீழ் இறங்கும் ஸ்ரீனிவாச பெருமாள் - பரசவத்தில் பக்தர்கள்
திருமலையில் தோ் செய்தது போக மிதம் இருந்த 2 கட்டைகள் இங்கு ப்ரதிஸ்டை செய்து சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் வகுளகிாி சேத்திரம் என்னும் கருங்குளம் என்ற ஊாில் குன்றின் மேல் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி இரு சந்தனகட்டையில் ஸ்ரீவெங்கடாசலபதி ஆகவும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசராக இருநிலைகளில் அருள்பாலிக்கின்றாா். திருமலையில் தோ் செய்தது போக மிதம் இருந்த 2 கட்டைகள் இங்கு ப்ரதிஸ்டை செய்து சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. அக்கட்டைகள் ஸ்ரீ வெங்கடாசலபதியாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா். பல நுற்றாண்டுகளாக தினமும் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றது. இன்றளவும் அந்த கட்டைகள் பின்னப்பட்டதில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்பாலித்து கொண்டிருக்கிறார் சுவாமி வெங்கடாஜலபதி.
சிறப்பு வாய்ந்த கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் சித்திரா பெளா்ணமி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 10 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பெருமாள் மலையிலிருந்து கீழ் இறங்கி வீதி உலா மற்றும் தாமிரபரணி நதியில் நீா் விளையாட்டு திருமஞ்சனம் கண்டருளி மீண்டும் மலைக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக நேற்று மாலை பக்தா்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி அபிஷேகத்திற்கு தீா்த்தம் எடுத்து வந்தனா். தொடா்ந்து நவ கலச ஸ்னப்ன திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் பொன்சப்பரத்தில் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் மலையிலிருந்து கீழ் இறங்கினாா். தீப்பந்த வெளிச்சத்தில் வான வேடிக்கை முழங்க பொன்சப்பரத்தில் இறங்கி வரும் காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தா்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை பெருமாளுக்கு சமா்பித்து தங்கள் வே்ண்டுதலை நிறைவேற்றினா். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தாிசனம் செய்தனா். தொடர்ந்து இன்று காலை பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி மலை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.