November Festival: சூரசம்ஹாரம், கார்த்திகை மாத பிறப்பு! நவம்பர் மாதத்தில் இத்தனை விசேஷங்களா?
நவம்பர் மாதத்தில் முருகப்பெருமானின் சூரசம்ஹாரம், மண்டல பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
ஆண்டின் 11வது மாதமான நவம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதத்தில் ஐப்பசி மாதமும், கார்த்திகை மாதமும் வருவது வழக்கம். டிசம்பர் மாதத்தில் மார்கழி மாதம் பிறக்கும் என்பதால் மார்கழியில் சுபமுகூர்த்த விசேஷங்கள் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை.
நவம்பர் மாத முக்கிய விசேஷங்கள்:
இதனால், திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் பெரும்பாலும் இந்த மாதத்தில் நடைபெறும். இந்த நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நவ. 1 – வெள்ளி - அமாவாசை
நவ. 2 – சனி - சந்திர தரிசனம்
நவ. 4 – திங்கள் – சோமவார விரதம்
நவ. 5- செவ் – சதுர்த்தி விரதம்
நவ. 7. வியாழன் – சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், சூரிய சஷ்டி
நவ. 9 – சனி – திருவோண விரதம்
நவ. 10 – ஞாயிறு - அட்சய நவமி
நவ. 12 – செவ்வாய் – ஏகாதசி
நவ. 13 – புதன் – பிரதோஷம், துளசி கல்யாணம்
நவ. 14. வியாழன் – குழந்தைகள் தினம்
நவ. 15 – வெள்ளி – பௌர்ணமி, ஐப்பசி பௌர்ணமி
நவ. 16 – சனி – கார்த்திகை விரதம், சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறப்பு
நவ. 18. திங்கள் – சங்கடஹர சதுர்த்தி
நவ. 22 – வெள்ளி – கலை பைரவர் அஷ்டமி
நவ. 26. செவ்வாய் – ஏகாதசி விரதம்
நவ. 28 – வியாழன் – பிரதோஷம்
நவ. 29 – வெள்ளி – மாத சிவராத்திரி
இந்த மாதத்தில் முக்கிய நிகழ்வாக கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு, கார்த்திகை மாதம் பிறப்பது வருகிறது. சூரசம்ஹாரத்திற்காக பக்தர்கள் அறுபடை கோயில்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். மகர ஜோதி பூஜைக்காக மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படுகிறது. அந்த நன்னாளில் ஐயப்ப பக்தர்கள் சாமிக்கு மாலை அணியத் தொடங்குவார்கள்.