மேலும் அறிய

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட் 5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் 16வது முறையாக தூத்துக்குடி மறைமாவட்டம் தோன்றி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் பனிமயத் தாயின் தங்க தேர் பவனி.

216 ஆண்டுகளில் 16வது முறையாக தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. அடுத்தாண்டு தங்கத்தேர். ஆயத்தப்பணிகள் தொடங்கியது.

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட்  5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் சிறப்புகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது 1806ம் ஆண்டு இப்பேராலயத்தின் பரதகுல மக்களால் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர்.தேவமாதாவின் சிறிய பக்தி முயற்சியான ஜெப மாலை பக்தியை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்தில் பல்வேறு வேதசத்தியங்களின் வெளிப்பாடாக தங்கத்தேரானது பரதகுலத் தலைவர் சிஞ்ஞோர்டோம் கபிரியேல் தெக்குருஸ்வாஸ் கோமஸ் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த கலை நுட்பத்துடனும், வேதசாஸ்திர வெளிப்பாடாகவும் பரதகுல சிற்பி நேவிஸ் பொன்சேகர் தங்கத்தேரை செய்து முடித்தார்.

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட்  5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

தேவமாதாவின் சுத்திகரிப்பு திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி 1806ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சுரூபம் திருமந்திர நகர வீதிகளில் முதன் முதலாக தங்கத்தேரில் பவனி வந்தது. மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்புகள் நிறைந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட்  5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி நகரில் 02-02-1806 அன்று முதலாவதாக தங்கத் தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து 2வது முறையாக 1872 ஆம் ஆண்டிலும், 3வது முறையாக 1879,4 வது முறையாக 1895 , 5 வது முறையாக 1905,6 வது முறையாக 1908, 7 வது முறையாக 1926, 8 வது முறையாக 1947, 9 வது முறையாக 1955, 10 வது முறையாக 1964,  11 வது முறையாக 1977 ஆண்டிலும், 12 வது முறையாக 1982, 13 வது முறையாக 2000 ஆண்டில் நடைபெற்றது. தொடர்ந்து 14 வது முறையாக 2007ம் ஆண்டிலும் அதனை தொடர்ந்து 15 வது முறையாக  05-08-2013 அன்று என இதுவரை 15 முறைகள் தூய பனிமய அன்னையின் தங்கத்தேர் பவனிகள் நடந்துள்ளது.

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட்  5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்துள்ளது. முதல் முறையாக 02.02.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு(2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைப்புககான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. தங்கத்தேர் வடிவமைக்கும் பணிக்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டாக 6 பனை மரங்களை கொண்டு ஷெட் அமைத்து இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. பின்னர் பக்தர்கள் படை சூழ தேர் கூடத்தில் இருந்து தேர் வெளியே எடுத்துவரப்பட்டு ஆண்களும் பெண்களும் வடம் பிடித்து இழுத்து கொண்டு வந்து இந்த ஷெட்டில் நிறுத்தி தேர் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன.

தூத்துக்குடியில் 2023 ஆகஸ்ட்  5 இல் பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி

இந்த பணிகள் முடிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பிஷப் குமார ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் 16வது முறையாக தூத்துக்குடி மறைமாவட்டம் தோன்றி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் பனிமயத் தாயின் தங்க தேர் தூத்துக்குடி மாநகரில் பவனி வர இருக்கிறது.

அதற்கு ஆயத்தமாக தங்கத்தேர் இழுத்து பேராலய வளாகத்தில் உள்ள புதிய தேர்கூடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணி நேற்று நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து அடுத்த 10 மாதங்களில் ஆயத்த பணி நடைபெறுகிறது. 53 அடி உயரம் கொண்ட இந்த தேரானது 53 ஜெபமாலை வைத்து ஜெபிக்கிறதை குறிக்கிறது என்றார்.

மேலும் படிக்க: Crackers Bursting Time: வெடிய வெடி.. இந்த நேரப்படி..வெடி வெடிக்க நேரம் அறிவித்த மாசுக்கட்டுப்பாடு வாரியம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: மாணவர்களே ஜாலியா ரெஸ்ட் எடுங்க,! நாளை 7 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை.!
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
எமகண்டம் தொடங்கியாச்சு! ஃபெஞ்சல் புயலுக்கு தயாரான சென்னை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone LIVE: சென்னையில் புயல் கரையை கடக்கும்போது பொதுப்போக்குவரத்து நிறுத்தம்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Father Death: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
President Murmu: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்.! குடியரசுத் தலைவரின் திருவாரூர் பல்கலைக்கழக பயணம் ரத்து.!
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
அதானி மின்சாரத்திற்கு அதிக விலை ஏன்? சிக்கலில் சிக்கிய தமிழக மின்துறை ; அன்புமணி கூறுவது என்ன ?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
ஏடிஎம்-ல் விட்டுச்சென்ற ரூ. 47 ஆயிரம் பணம் - அடுத்து நடந்தது என்ன?
Embed widget