Magaram Rasi Puthandu Palan: மகர ராசிக்காரர்களே! 2024ம் ஆண்டு உங்கள் வாழ்வில் மாற்றத்தை தருமா?
NewYear RasiPalan 2024 Magaram Rasi: வரும் ஆண்டு உங்களுக்கு மனதிற்கு பிடித்தமான செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறி உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தப் போகிறது. உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது.
“ 2024” - மகர ராசி வருட பலன்:
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,
2024 ஆம் ஆண்டு உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இரண்டாகப் பிரிக்கிறேன். வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் ஒருவிதமாகவும் எஞ்சிய ஒன்பது மாதங்கள் வேறு விதமாகவும் உங்களுக்கு பலன்கள் நடக்கப் போகிறது.
வருடத்தின் முதல் 3 மாதங்கள் :
மகர ராசிக்கு வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் குரு பகவான் மேஷ ராசியில் அமர்கிறார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல வாகனத்தை வாங்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் இருந்த உங்களுக்கு உங்களுடைய கனவு நடக்கப்போகிறது. சிறிய வீடாக இருக்கிறது, நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் என்று புலம்பிக்கொண்டே இருந்தீர்கள் அல்லவா? உங்களுக்கான ஏற்றமான காலகட்டம் வந்துவிட்டது. சொந்தமாக அதுவும் மிகப்பெரிய விஸ்தாலமான வீட்டைக் கட்டி குடியேறப் போகிறீர்கள். சொந்த வீடு இல்லை வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என்றாலும், இருக்கும் வீட்டை விட்டு மிக காற்றோட்டமான மற்றொரு வீட்டிற்கு நீங்கள் குடிபெயரப் போகிறீர்கள்.
நீண்ட நாட்களாக மனை வாங்க வேண்டும், காலி மனையில் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணி இருந்தீர்கள் அல்லவா அந்த கனவும் தற்போது நடக்கப் போகிறது. நான்காம் வீட்டில் இருந்து மகரத்திற்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் அடையப்போகிறது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள். நானும் வேலை செய்கிறேன் என்னைப் போல மற்றவர்களும் வேலை செய்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் பாராட்டு கிடைக்கிறது.
எனக்கு எதுவுமே கிடைக்க வில்லை என்று ஏக்கத்தோடு இருந்த உங்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும், சக ஊழியர்களால் பெரிதும் மதிக்கப்படுவதும், வேலைத்தளத்தில் புத்துணர்ச்சியும் பெற போகிறீர்கள். நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் என்று காத்திருந்த உங்களுக்கு சுற்றுலாவுக்காகவோ அல்லது வேலைக்காகவோ நிச்சயமாக அயல்நாடு செல்ல போகிறீர்கள். இருக்கும் ஊரை விட்டு எங்கேயாவது மனதிற்கு நிம்மதியாக ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கனவு கண்டிருந்தீர்கள் அல்லவா? அந்த கனவும் நடக்கப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் தன வரவு உங்களுக்கு கிடைப்பதற்கான அதிகப்படியான சத்திய கூறுகள் உள்ளது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் அடுத்தவரின் பணம் உங்களுக்கு நிச்சயமாக லாபமாக வந்து சேரும்.
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை
உங்கள் ராசிக்கு சனி பகவான் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். அஷ்டமத்து சனியின் கடைசி பக்கத்தில் இருக்கும் உங்களுக்கு நிச்சயமாக உங்கள் ராசியாதிபதியாகவே சனி இருப்பதால் அஷ்டம சனி பெரியதாக உங்களுக்கு ஒன்றும் செய்து விடப் போவதில்லை. குறிப்பாக மற்ற ராசிக்கு அஷ்டம சனி வந்தால் உயிரை எடுக்கும் அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும். உங்களுக்கும் ஓரளவுக்கு அது போன்று வந்துபோய் இருக்கலாம், ஆனால் பாத சனியாக இருப்பதால் நடந்து செல்லும் போது காலில் ஏதாவது இடர்பட்டு அதன் மூலமாக உங்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதே தவிர, நிச்சயமாக பெரிய பாதிப்புகள் ஒன்றும் ஏற்படாது.
குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் மே மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு வரப்போகிறார் என்ன ஒரு ஆனந்தம் உங்களுடைய 12 ஆம் அதிபதி மூன்றாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் விட்டு இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய சௌகரிய பலத்தை கொண்டு வரும். நிம்மதியான உறக்கத்தை கொண்டு வரும். குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் உங்களுக்கு பொலிவு கூடும். தன்னம்பிக்கை உயரும். யாரிடம் எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று பக்குவம் உண்டாகும் .
மூன்றாம் இடத்தில் ராகு ஒன்பதாம் இடத்தில் கேது
மூன்றாம் இடத்தில் ராகு ஒன்பதாம் இடத்தில் கேது இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். காரணம் என்னவென்றால் உங்களுடைய நண்பர் ஒரு செயலை செய்ய எண்ணுகிறார் என்றால் அந்த செயலை நீங்கள் முன்கூட்டியே முடிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பினை மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு வழங்கப்போகிறது. ராகு பகவான் அமர்ந்திருப்பது குருவினுடைய வீடு.
குரு உங்களுக்கு மூன்றாம் அதிபதியாகி உங்களுடைய நான்காம் வீட்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் நான்காம் வீட்டிலும் பிறகு எஞ்சிய 9 மாதங்கள் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கும் போகிறார். அப்படி என்றால் ஐந்தாம் வீட்டில் வீட்டிற்கும் குரு பகவான் மூன்றாம் வீட்டில் இருக்கும் ராகுவுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்யப் போகிறார் . சில, சில பிரச்சனைகள் வந்து போகும். குறிப்பாக தந்தையார் வழி உறவு தந்தையாரின் குடும்பத்தார் வழி உறவுகள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம். நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் கோவிலுக்கு சென்று விட்டு சுப காரியத்துடன் பிரயாணங்களை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக ஒன்பதாம் இடம் என்பது கன்னி வீடாக வருகிறது. அதில் கேது பகவான் அமர்ந்திருப்பதால் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் பெருமாள் . எனவே ராகு கேது உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப் போகிறார்கள் .
நினைத்த காரியம் நடக்கும்
உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களோ அதை எல்லாம் மே மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரைக்குள்ளான காலகட்டத்தில் நிச்சயமாக சாதிக்க போகிறீர்கள். குறிப்பாக பூர்வீகம் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் உங்களுடைய கைக்கு வந்து சேர போகிறது, உங்களுக்கான புத்திர பாக்கியம் மிகச் சிறப்பாக இருக்கப்போகிறது. திருமணம் ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது புத்திர பாக்கியம் இல்லை என்று ஏக்கத்துடன் இருக்கிறீர்களா கவலை வேண்டாம். வருகின்ற மே மாதம் முதல் உங்களுக்கான புத்திர பாக்கியத்திற்கான ஒரு நல்ல நாள் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்படியான சூழ்நிலையில் உங்களுக்கு மனதிற்கு பிடித்தமான செயல்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறி உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தப் போகிறது. உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது.
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்டமான எண் : 8, 3
வணங்க வேண்டிய தெய்வம் : காவல் தெய்வங்கள்