மேலும் அறிய

திருநெல்வேலி: வெகு விமரிசையாக நடந்த நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்.. சிறப்பு விவரங்கள்..

சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரை வார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவருக்கும் புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனி தேரோட்டமும், அம்பாளுக்கு ஆடி வளைகாப்பு மற்றும்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 தினங்கள் தினமும் காலை, மாலை காந்திமதி அம்மனுக்கு அபிஷேகம், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

நேற்று  முன் தினம் பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.00  மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

திருநெல்வேலி: வெகு விமரிசையாக நடந்த நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்.. சிறப்பு விவரங்கள்..

இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன. சுவாமி அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம், பாலும் பழமும் கொடுத்தல்  என சடங்குகள் நடைபெற்றன. சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரை வார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி  வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்திருந்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்மன் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருநெல்வேலி: வெகு விமரிசையாக நடந்த நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்.. சிறப்பு விவரங்கள்..

அதேபோல பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது அருள்தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில். பழமையும், பெருமையும் கொண்ட திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பு பெற்றதாகும். கடந்த 12-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நேற்று மாலையில் இராமசுவாமி திருக்கோவில் முன்பு  சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடா்ந்து, திருவிழாவின்  முக்கிய நிகழ்வான  திருக்கல்யாண  திருவிழா அம்பாள் சன்னதி மகா மண்டபத்தில் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget