மேலும் அறிய

நவராத்திரி; மதுரை மீனாட்சி கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்

கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படவில்லை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல்நாள் விழாவை முன்னிட்டு  ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

நவராத்திர பண்டிகைக்காகன கொண்டாட்டம்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி கொண்டாட பல புராணங்கள் கூறப்பட்டாலும் அம்பிகையை 9 நாட்கள் வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த 9 நாட்களும் அம்பிகை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிறத்தில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகைக்காகன கொண்டாட்டம் தொடங்கியது. நவராத்திரி என்றாலே தமிழ்நாட்டில் கொலு பொம்மைகளை வைத்து வீடுகளில் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி முதல்நாள் விழாவை முன்னிட்டு  ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

- Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு

திருவிளையாடல் புராணங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நவராத்திரி விழா வருகிற 12ஆம் தேதி வரை  நடக்கிறது. இதையொட்டி சாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. கொலு மண்டபத்தில் சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் கதைகள், சிவபெருமானின் வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. கொலு மண்டபத்தில் நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, சங்க பலகை அளித்தது, கால் மாறி ஆடிய படலம், குண்டோதரருக்கு அன்னமிடல், தாகம் தீர்த்தல், மீனாட்சி பிள்ளை தமிழ், மீனாட்சி ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.

ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்

அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்திரி முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். கைகளில் கரும்பு தாமரை மலர் ஏந்தி காட்சியளித்த மீனாட்சியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மீனாட்சியம்மனுக்கு முன்பு அலங்கார தொட்டியில் விநாயகர் உருவில் நீர்க்கோலம் வரையப்பட்டு இருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது

விழாவையொட்டி 12 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற பூஜைகள் நடைபெறுகிறது. அந்த பூஜை காலங்களில் பக்தர்களின் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனை மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கு நடத்தப்படாது. அதே போல் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவ மீனாட்சி அம்மனுக்கு தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படவில்லை.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IRAN Indian Guidelines: ”ஈரான் பக்கமே இந்தியர்கள் போக வேண்டாம்” - வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Embed widget