மேலும் அறிய
Advertisement
காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் செய்ய ஏன் திருப்புவனத்தில் கூட்டம் கூடுகிறது தெரியுமா?
திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைகிறது. அமாவாசை நாட்களிலே மகாளாய அமாவாசை மிக மிகச் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்த மகாளாய அமாவாசை மகாளய பட்ச காலத்தில் செய்யப்படும் நாள் ஆகும். இந்நிலையில் திருப்புவனம் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை முன்னிட்டு அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யப்பட்டது.
மகாளாய அமாவாசை
மகாளய பட்ச காலம்: மகாளயம் என்றால் ஒன்று கூடுதல் என்று அர்த்தம். பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவு ஆகும். நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கான காலமே மகாளயபட்சம் ஆகும். நம் முன்னோர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவதற்கான 15 நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வந்து 15 நாட்கள் தங்கியிருப்பதாகவும். இந்த காலகட்டத்தில் நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடுகள், பிறருக்கு செய்யும் தானங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்கள் ஆசிர்வாதத்துடன் நமது வாழ்க்கை முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பித்ரு தோஷம், பித்ரு சாபம் நீங்கும்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்ச காலம் ஆகும். நடப்பாண்டிற்கான மகாளய பட்ச காலம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கிவிட்டது. மகாளய பட்சம் இன்று அக்டோபர் 2ம் தேதி வரை வருகிறது. இந்த காலகட்டத்தில் முன்னோர்களை வணங்குவதால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவை நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மகாளாய அமாவாசை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில். இங்கு புரட்டாசி மகாளாய அமாவாசை திருநாளை முன்னிட்டு அதி காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து வழிபாடு
காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக தர்ப்பணம் கொடுக்கும் கோயில் ஸ்தலமாக திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் சாதாரண நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பணம் செய்து சூரியபகவானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து விநாயகர் பெருமானையும் புஷ்பனேஸ்வர ஸ்வாமி சௌந்தர நாயகி அம்மனையும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர் .
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திருப்பதி லட்டுக்கு இணையான சுவையுடன் புட்டுமாவு உருண்டை; அம்மன் திருவிழாவில் ஸ்வாரசியம்!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion