மேலும் அறிய

Navratri 2023: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகல ஆரம்பம்

திருமணத் தடைகளை அகற்றும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாடுமுழுவதும் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 நாட்களிலும் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது  இரவுகளே  இந்த நவராத்திரி திருவிழாவாகும். நாவராத்திரி முடிந்து வரும் தசமி திதியை விஜயதசமி என்று கொண்டாடி பூஜையை இந்துகள் நிறைவு செய்கின்றனர்.

Navratri 2023: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகல ஆரம்பம்

பொதுவாகவே, பிரதமை அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் எல்லா திதிகளிலும் இறையம்சம் இருக்கிறது என்பதை  உணர்த்துவதற்காக நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரி வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தங்கள் படிப்புக்கு தேவையான விஷயங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று அனைத்துத் தளத்திலும் தொழில் செய்பவர்கள் அயூத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

Navratri 2023: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகல ஆரம்பம்

விஜயதசமி நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை, கல்வி மற்றும் யோகத்துக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து விளங்கலாம். இந்நிலையில் இந்த நாளில் கல்வி கற்கவும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் சிறந்தது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை  வழிபடுவதும் ஆராதிப்பதும் அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி, சுமங்கலிகளையும், பெண்களையும் வரவேற்று, மங்கலப் பொருட்கள் வழங்குவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் பொங்கச் செய்யும், தீர்க்கசுமங்கலியாக வாழச் செய்யும் என்பதும்  நம்பிக்கை‌.

Navratri 2023: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகல ஆரம்பம்

இத்தகைய சிறப்புமிக்க நவராத்திரி விழா, முதல் மூன்று நாட்கள் துர்க்கை அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மி இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகிய தெய்வங்களை ஒன்பது நாட்கள் வழிபடுவது நவராத்திரியின் சிறப்பாகும். வீடுகள் மற்றும் ஆலயங்களில் கொலு பொம்மைகள் அமைத்து தினசரி பக்தி பாடல்கள் பாடி நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வார்கள். அதன்படி திருமண தடைகளை அகற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருமணஞ்சேரி உத்வாகநாதர் ஆலயத்தில் நவராத்திரி விழா முதல்நாள் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம் - திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருத்துருத்தி எனப்படும் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசை முன்னிட்டு அதற்கு அடுத்த நாளிலிருந்து நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.  அந்த வகையில் நேற்று மாலை 15 -ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழாவானது கொண்டாடப்படுகிறது.  அரும்பன்ன வனமுலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து கொலுவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கொலுவில் பல்வேறு சுவாமி சிலைகள், தேச தலைவர் மற்றும் பிற பொம்மைகளை அடுக்கி ஒன்பது படிகளாக வைத்து அணு தினமும் மாலை பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்வில் நலம் பெற வேண்டி சுவாமி அம்பாளை தரிசனம் செய்து வணங்கி சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
Embed widget