மேலும் அறிய

காண கண் கோடி வேண்டும்... ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத அமாவாசையையொட்டி இன்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை 

தொடர்ந்து இன்று மாலை மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. இரவு 11.30 மணிக்கு பம்பைமேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊர்வலமாக புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்த பின்னர் அங்கிருந்த ஊஞ்சலில் அங்காளம்மன் எழுந்தருளுவர்.

மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு  தாலாட்டு பாடலுடன் ஊஞ்சல்

இதைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அருள்பாலிப்பார். தொடர்ந்து மகா தீபாராதனை ஏற்றப்படும். அப்போது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பி அங்காளம்மனை தரிசனம் செய்வார்கள். மேலும் பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு

ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.

அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .

அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.

 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் செல்வது எப்படி?

மேல்மலையனூர் திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே 35 கிலோ மீட்டர் தூரத்திலும், செஞ்சிக்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும்,சென்னையில் இருந்து தென்மேற்கில் திண்டிவனம் வழியாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.மேல்மலையனூரில் இருந்து-சென்னைக்கு செஞ்சி திண்டிவனம் வழியாகவும், சேத்துப்பட்டு, வந்தவாசி வழியாகவும் அடிக்கடி செல்ல பஸ் வசதி உள்ளது. மற்றும் மேல்மலையனூர் - செஞ்சி, திண்டிவனம், பாண்டிச்சரிக்கும் மேல்மலையனூர் - விழுப்புரம் கடலூர் சிதம்பரத்திற்கும், மேல்மலையனூர் -ஆரணி வேலூர் செல்லவும், மேல்மலையனூர் - அவலூர்பேட்டை வழியாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை செல்லவும்,மேல்மலையனூர் - திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லவும் வசதி உள்ளது.

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், திருவிழா காலங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. செஞ்சி-, திண்டிவனம்-, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு, பெங்களூர் ஆகிய ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு நேரடியாக செல்ல சிறப்பு பேருந்து வசதி உள்ளது. மேலும் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த ஊர்களுக்கு வந்து செஞ்சி, சேத்துப்பட்டு, வளத்தி வழியாக மேல்மலையனூர் வந்தடையலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget