மேலும் அறிய

புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காவிரியில் இருந்து புனிதநீர் யானைகள் மேல் ஏற்றி ஒட்டகம் குதிரை காளைகள் புடை சூழ கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த காவிரி ஆற்றின் வடக்கு பக்கம் உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற குரு பரிகார ஆலயமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற பத்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது.

புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

இதனை முன்னிட்டு காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வேதியர்கள் மந்திரம் ஓத கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, ஐந்து யானைகள் மீது புனித நீர் அடங்கிய கடங்கள் ஏற்றப்பட்டு ஊர்வலமாக வதான்யேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் வெள்ளை குதிரைகள், ஒட்டகம், பசு, மாடு, காளை உள்ளிட்ட மங்கல சின்னங்கள் முன்னே செல்ல, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், சிறுவர்கள் கடவுளர்கள் போல் வேடம் அணிந்தபடி பங்கேற்ற நிலையில் வேத மந்திரங்கள் மற்றும் தேவார பதிகங்கள் ஓதியபடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்தை வந்தடைந்தது. 

India Bharat Row: ஜி20 மாநாடு: இந்தியா ஒன்றும் பாஜகவின் சொத்து கிடையாது.. மோடியை சாடும் எதிர்க்கட்சிகள்..

புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்திற்குள் எடுத்து செல்லப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நாளை புனிதநீர் அடங்கிய கடங்கள் யாகசாலை பிரவேசம் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

India Bharat Row: ”இந்தியா” பெயரை தூக்கிய மத்திய அரசு.. ஜி20 மாநாட்டிற்கு ”பாரத குடியரசு தலைவர்” என அச்சிட்டு அழைப்பிதழ்

புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

முன்னதாக வதான்யேஸ்வரர் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சொக்கநாத பெருமான் திருஉருவசிலையுடன் கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்து குரு லிங்க சங்கம யாத்திரையாக கோயிலை வந்தடைந்தார்.

புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான வதான்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு தேதி அறிவிப்பு

Dr Radhakrishnan Award: அடேங்கப்பா.. இத்தனை பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் உதயநிதி தலைமையில் வழங்கும் அன்பில்

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குதிரை, ஒட்டகம், யானை, சிவன், காளி வேடமணிந்த நாட்டிய கலைஞர்கள் முன்செல்ல இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோயிலில் நடைபெற்று வரும் யாகசாலை பணிகள் உள்ளிட்ட கும்பாபிஷேக பணிகளை தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?

விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?

Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!

கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR

Embed widget