மேலும் அறிய

பகீர் வெயிலிலும் பக்தி பரவசம்!சித்திரை தேரோட்டத்தில் திரண்ட பக்தர்கள்...

சீர்காழி சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

சீர்காழி:‌ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்றதும் உலகப் புகழ்பெற்றதுமான ஸ்ரீ சட்டைநாதர் கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு வடம் பிடித்துத் தேரினை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மூன்று நிலைகளில் அருள்பாலிக்கும் ஈசன்

சீர்காழி திருத்தலம் ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீசுவரர், ஸ்ரீ தோணியப்பர் மற்றும் ஸ்ரீ சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இத்தகைய பழமை வாய்ந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் விழா

இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான 22-ஆம் தேதி, இத்தலத்தின் மிக முக்கிய நிகழ்வான ‘திருமுலைப்பால் விழா’ வெகுவிமரிசையாக நடைபெற்றது. பிரம்ம தீர்த்தக்கரையில் சிறுவர் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டிய ஐதீகத்தை நினைவு கூறும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.

பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் தேரோட்டம்

பிரம்மோற்சவத்தின் எட்டாம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை 7 மணி அளவில், விநாயகர் மற்றும் முருகன் தனித்தனித் தேர்களிலும், மூலவர் சுவாமி, அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர் மலர் அலங்காரங்களுடன் மற்றொரு பிரம்மாண்ட தேரிலும் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத, மகா தீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் கடலில் அசைந்தாடிய திருத்திருத்தேர்

மகா தீபாராதனை முடிந்தவுடன், திரண்டிருந்த திரளான பக்தர்கள் "சம்பந்தா... சட்டைநாதா..." என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தது. வீதிதோறும் காத்திருந்த பக்தர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனைகள் செய்து, கற்பூர ஆரத்தி எடுத்து மனமுருக வழிபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். 

பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறையினர் சீர்காழி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேரோட்டப் பாதையில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கங்கள் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை தீர்த்தவாரி மற்றும் இதர வைபவங்கள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் தருமபுரம் ஆதீன நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
பங்குனி முயக்கம்? தமிழர் பாரம்பரியத்தின் அரிய ஆன்மிக விழா: தெரிந்து கொள்ளுங்கள்
இன்று ஆடி பௌர்ணமி! இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இன்று ஆடி பௌர்ணமி! இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இதுதாங்க தமிழ்நாடு... மாரியம்மன் கோயில் திருவிழாவில் சீர்வரிசை கொடுத்து நெகிழவைத்த இஸ்லாமிய சகோதரர்கள்!
இதுதாங்க தமிழ்நாடு... மாரியம்மன் கோயில் திருவிழாவில் சீர்வரிசை கொடுத்து நெகிழவைத்த இஸ்லாமிய சகோதரர்கள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget