மேலும் அறிய

குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள் - பரவசத்தில் மெய்சிலிர்த்த மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழாவனது கடந்த மார்ச் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள் - பரவசத்தில் மெய்சிலிர்த்த மக்கள்!

தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதனை அடுத்து தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அம்மன் வீதியுலா காட்சியும்  நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான 14 ம் நாள் திருவிழாவான  தீமிதி திருவிழா நடைபெறுகிறது. தீமிதி நிகழ்வை  முன்னிட்டு கோயில் தீர்த்த குளத்திலிருந்து சிறப்பு பூஜைகளுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க கரகம் புறப்பாடு செய்யப்பட்டது.

Goli Soda Seetha : இந்த மூஞ்சியெல்லாம் நடிக்குதா? வாய்ப்பு கொடுத்த விஜய் மில்டன்.. கோலி சோடா சீதா ஓபன் டாக்

குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள் - பரவசத்தில் மெய்சிலிர்த்த மக்கள்!

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு காவடி எடுத்தும் 16 அடிநீள அலகை வாயில் குத்தியும், மஞ்சள், சிவப்பு உடை உடுத்தி  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில்  இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு மா விளக்கு போட்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கோயில் திரண்டிருந்தனர்.  விழாவில் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள்  நடைபெற்றன.

Impact Player: ஐபிஎல்லில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி… ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தினரா?

குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள் - பரவசத்தில் மெய்சிலிர்த்த மக்கள்!

இதேபோல் இலுப்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயிலில் 23 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 23 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து  வீரசோழன் ஆற்றில் இருந்து கரகம் சிறப்பு பூஜைகளுடன் புறப்பாடு செய்யப்பட்டது. காப்பு கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் ஆற்றங்கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கரகம் முன்னே செல்ல பின்தொடர்ந்தது கோயிலை வந்தடைந்தனர். 

New districts: தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள்...சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்..!

குழந்தைகளுடன் தீ மிதித்த பக்தர்கள் - பரவசத்தில் மெய்சிலிர்த்த மக்கள்!

சக்தி கரகம் முன்னதாக தீக்குழியில் இறங்க அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு தீபமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கண் கவரும் வானவேடிக்கைகள் விண்ணில் சீறிப்பாய்ந்த நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. தீமிதி திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

LSG vs DC IPL 2023: தீரா வெறியுடன் திரும்பும் டெல்லி.. புள்ளிகளில் லக்னோதான் கெத்து.. யார் அதிக வெற்றி..?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget