மேலும் அறிய

பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது திருவெண்காடு புதன் ஸ்தல கும்பாபிஷேக பெருவிழா... பரவசத்தில் பக்தர்கள்‌...!

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமான 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

கோயிலின் சிறப்புகள் 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  


பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது திருவெண்காடு புதன் ஸ்தல கும்பாபிஷேக பெருவிழா... பரவசத்தில் பக்தர்கள்‌...!

கும்பாபிஷேக ஏற்பாடு 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற 9 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது விமர்சனங்களுக்கு ஆளானது. 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு 

பொதுவாக கோயில்களில் ஆகம முறைப்படி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயில் குடமுழுக்கு நடைபெறும். மேலும் சில தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகளை கடந்து பல கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள்.


பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது திருவெண்காடு புதன் ஸ்தல கும்பாபிஷேக பெருவிழா... பரவசத்தில் பக்தர்கள்‌...!

ஒரு மாமாங்கம் என்பது 12 ஆண்டுகளைக் குறிக்கும். தேவதா ஆராதனைக்கு குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார். 12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் காலம் ஆகும். நாம் வாழுகின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குருபகவான் இந்த அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக வைத்துக் கொள்ளலாம்.

25, 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு 

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்தினை புனருத்தாரணம் என்று அழைப்பர். பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பது மிகவும் விசேஷமானது.


பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது திருவெண்காடு புதன் ஸ்தல கும்பாபிஷேக பெருவிழா... பரவசத்தில் பக்தர்கள்‌...!

முன்னதாக நடைபெறும் கும்பாபிஷேகம்

இந்நிலையில் தமிழகத்தில் ஏராளமான ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலையில், பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேறாத திருவெண்காடு கோயில் அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடைபெறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதுமட்டுமன்றி கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலையாக போடப்பட்டுள்ளது.

பக்தர்கள் கோரிக்கை 

ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பாழடைந்து உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கும், ஒருகால பூஜைக்கு வழியில்லாத கோயில்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்னுரை வேண்டுமென பொதுமக்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது திருவெண்காடு புதன் ஸ்தல கும்பாபிஷேக பெருவிழா... பரவசத்தில் பக்தர்கள்‌...!

பூர்வாங்க பூஜைகள்

இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கோயில் தொடங்கியுள்ளனர். இதற்காக சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக குண்டம் அமைக்கப்பட்டு தேவதா அனுக்ஞை, எஜமான் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணகதி மகா தீபாரதனைக்கு பின் கலசங்கள் புறப்படாகி விநாயகர், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை கோயில் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget