மேலும் அறிய

"ஊர்கூடி தேர் இழுத்த பக்தர்கள்" எந்த கோயிலில் தெரியுமா..?

சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் விழாவாக திருத்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் எட்டாம் நாள் திருவிழாவாக நடைபெற்ற திருத்தேர் உற்சவத்தில் ஊர்கூடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

திருஞானசம்பந்தர் வரலாறு

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. 

சித்திரை பெருவிழா

இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1-ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 2-ம் நாள் உற்சவமான திருமுலைப்பால் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர். 

திருத்தேரோட்டம்

சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான 8-ம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாயகர், சுவாமி - அம்மன், திருஞானசம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினார். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது .தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருத்தேரானது கீழவீதியில் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேர் வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். இதில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்வுகள் 

தொடர்ந்து 13-ஆம் தேதி தெப்ப உற்சவம், 23 -ம் தேதி முத்து சட்டைநாதர் உற்சவமும் நடைபெற உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
TVS Raider vs Bajaj Pulsar NS125: டிவிஎஸ் ரெய்டரா.? பஜாஜ் பல்சர் NS125-ஆ.? கொடுக்கும் பணத்திற்கு Worth-ஆன பைக் எது.? தெரிஞ்சுக்கோங்க
டிவிஎஸ் ரெய்டரா.? பஜாஜ் பல்சர் NS125-ஆ.? கொடுக்கும் பணத்திற்கு Worth-ஆன பைக் எது.? தெரிஞ்சுக்கோங்க
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
Embed widget