மேலும் அறிய

ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் மாத ஐப்பசி பிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

தமிழ் மாத ஐப்பசி பிறப்பை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பழமையான திருவெண்காடு வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

UGC NET Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது?- வைரலான போலி தகவல்- ஒருவழியாக அறிவித்த என்டிஏ

ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். 

NTET 2024: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு- எப்படி?

ஐப்பசி மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்

அந்த வகையில் இன்று பஞ்சாங்க முறை படி முன்னதாக ஐப்பசி மாத பிறந்ததை அடுத்து சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர். 

கரூரில் நீதிமன்றம் மூலம் கோயில் இடத்தை மீட்ட இந்து அறநிலை துறை - தீர்வை நோக்கி காத்திருக்கும் மக்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
India Lowest Score:46 ரன்களுக்கு ஆல்- அவுட்; 36 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி
India Lowest Score:46 ரன்களுக்கு ஆல்- அவுட்; 36 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
Virat Kohli Duck Out:
Virat Kohli Duck Out:"கலங்காதே ராசா காலம் வரட்டும்"டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை செய்த கோலி! என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.!தூய்மை பணியாளர்களுக்கு, தானே பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
India Lowest Score:46 ரன்களுக்கு ஆல்- அவுட்; 36 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி
India Lowest Score:46 ரன்களுக்கு ஆல்- அவுட்; 36 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமான சாதனையை செய்த இந்திய அணி
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
TVK: மாநாட்டிற்கு தயாராகும் விஜய்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்!
Virat Kohli Duck Out:
Virat Kohli Duck Out:"கலங்காதே ராசா காலம் வரட்டும்"டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை செய்த கோலி! என்ன?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் திடீரெனக் குறைப்பு; எவ்வளவு நாட்களுக்கு? ஏன்?
இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
இன்ஸ்டாகிராம் காதல்... பாலியல் சீண்டலில் சிக்கிய சிறுமி... 4 இளைஞர்களை கைது செய்த போலீஸ்
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
“உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?” மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய சந்திரசூட்..!
ஆளுநருக்கு மனமாற்றம் வந்துள்ளது: செல்வ பெருந்தகை ஏன் இப்படி சொன்னார்?
ஆளுநருக்கு மனமாற்றம் வந்துள்ளது: செல்வ பெருந்தகை ஏன் இப்படி சொன்னார்?
Embed widget