மேலும் அறிய

Mayana Kollai: சேலத்தில் மயான கொள்ளை திருவிழா... பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்

மயான கொள்ளை திருவிழாவில் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் காவல் தெய்வங்களின் வேடமிட்டு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மயான கொள்ளை என்பது அகிலத்தை காக்கும் அம்மன் கடும்கோபம் அடைந்து உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார் என்பது ஐதீகம். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அமாவசை தினத்தில் மயான கொள்ளை விழா வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 

Mayana Kollai: சேலத்தில் மயான கொள்ளை திருவிழா... பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்

மயான கொள்ளை திருவிழா:

அதன் அடிப்படையில் மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்தி தினத்தில் அங்காள அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரும் போது விரதம் இருக்கும் பக்தர்கள் அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல குழந்தைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என ஏராளமானோர் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்துவர்.

நேர்த்திக்கடன்:

அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் ரத்தம் சிந்த வரும்போது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்கள் அம்மன் வரும்போது வழிகள் தோறும் படுத்து கொள்ளவார்கள். இந்த நிலையில் பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பில்லி, பிணி, என சகலமும் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடிப்பார்கள்.‌

இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்வார்கள். சேலம் மாநகர மணக்காடு, கிச்சிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் வேடமிட்டு ஜான்சன் பேட்டை மயானத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

Mayana Kollai: சேலத்தில் மயான கொள்ளை திருவிழா... பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்

இதுகுறித்து பக்தர்கள கூறும்போது, பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள்  கூறும்போது, இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் மேலும் பில்லி, பிணி பிடித்தவர்கள் இங்கே கலந்து கொண்டால் நீங்கி விடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget