மேலும் அறிய

மாசிமக தீர்த்தவாரியில் புனித நீராடிய பக்தர்கள்... கும்பகோணம் திருவிழா பூண்டது

குளத்தில் அஸ்ரத் தேவருக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகமும், ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகமும் வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டு இன்று நடந்த மாசிமக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தாண்டு சைவ தலங்களான காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களில் கடந்த மார்ச் 3ம் தேதியும், வைணவ தலங்களில் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய மூன்று கோயில்களில், கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா மாசிமக விழா தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 

மாசிமக தீர்த்தவாரியில் புனித நீராடிய பக்தர்கள்... கும்பகோணம் திருவிழா பூண்டது

தொடர்ந்து நேற்று காலை ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீவரர் தேரோட்டமும்,  மாலை சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவிலைச் சுற்றியும், காசி விசாலாட்சி அம்மன் உடனாய காசிவிஸ்வநாதர், அமிர்தவள்ளி அம்பாள் உடனாய அபிமுகேஸ்வரர் சுவாமி சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய மூன்று கோயில்களின் சுவாமிகள் மகாமககுளத்தைச் சுற்றி தேரோட்டம் நடந்தது.  

தொடர்ந்து, இன்று (12ம் தேதி)  காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோவில் சுவாமிகள் அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர்.  பிறகு, குளத்தில் அஸ்ரத் தேவருக்கு பல்வேறு வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில், புனித நீராடினர். 

மகாமக முதன்மை கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயில், ஆதிகம்பட்டவிஸ்வநாதர் கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருவதால், அந்த கோயில்களில் இந்தாண்டு மாசிமக பெரு விழா உற்சவம் கிடையாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

இதே போல், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று கோயில்களில் காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி சுவாமி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget