மேலும் அறிய
Advertisement
Mahashivratri 2023: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய பூஜை நடைபெற்றது. சிவன் கோவில்களில் இரவு 9 மணி, நள்ளிரவு 12 மணி, அதிகாலை 2 மணி மற்றும் 4 மணி ஆகிய நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பய, பக்தியுடன் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர். திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோகர்ணேசுவரர் கோவில், டவுன் சாந்தநாத சாமி கோவில், திருவேங்கைவாசல் சிவன் கோவில், திருவப்பூர் ஈஸ்வரன் கோவில், திருக்கோகர்ணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவ பக்தர்களும் விரதம் இருந்து சிவராத்திரி வழிபாடு நடத்தினர். கோவில்களில் ஆன்மிக சொற்பொழிவுகளும், பரதநாட்டியங்களும், ஆன்மிக வைபவங்களும் நடைபெற்றது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஒவ்வாரு சிவன் கோவிலாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அனைத்து சிவன்கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.
இதேபோல அறந்தாங்கி, நாகுடி பகுதிகளில் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆலங்குடியில் தர்ம சம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சிவராத்திரி விழா நடைபெற்றது. 4 கால பூஜைகள் நடைபெற்றது.இதுபோல் குப்பகுடி வெற்றி ஆண்டவர் சிவன்கோவில், கோவிலூர் பாலபுரீஸ்வரர் சிவன் கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா 6 கால பூஜைகளுடன் நடைபெற்றது. கீரனூர், குளத்தூர், மலையடிப்பட்டி, கிள்ளுக்கோட்டை, களமாவூரில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடும், அதனை தொடர்ந்து சிவராத்திரி விழாவும் நடைபெற்றது. இதில் 5 கால பூஜை நடைபெற்றது. அரிமளம் அருகே நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் பல்வேறு கால பூஜைகள் நடத்தினர். இதேபோல், அரிமளம், ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு 4 கால பூஜைகள் நடத்தப்பட்டது. கைலாசபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையடுத்து
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion