மேலும் அறிய

Mahashivratri 2023: மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி...புராண வரலாறுகளை நாடகமாக அரங்கேற்றிய மாணவர்கள் 

மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியஞ்சலி 3 -ம் நாள் நிகழ்வில் முருகனின் அறுபடை வீடுகள் என்ற தலைப்பில் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளை ஒரு மணி நேரத்தில் அரங்கேற்றம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சிவனை அபயாம்பிகை அம்மன் மயிலுரு கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த புகழ்வாய்ந்த பழமையான மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 16 -ஆண்டுகளாக மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 

Mahashivratri 2023: மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி...புராண வரலாறுகளை நாடகமாக அரங்கேற்றிய மாணவர்கள் 

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை  சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை 17 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி கடந்த 15 -ம் தேதி இரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து  4 நாட்கள் பெறுகிறது. மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். 

CEE: ராணுவப் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் - தேர்வு நடைமுறையை மாற்றி அமைத்த அரசு

Mahashivratri 2023: மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி...புராண வரலாறுகளை நாடகமாக அரங்கேற்றிய மாணவர்கள் 

இதில் முதல் நாள் நிகழ்வில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட  ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, பெங்களூர் பகுதிகளில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள்  பங்கேற்ற பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. 

Thiruvannamalai ATM Theft: ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 3-ந் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு

Mahashivratri 2023: மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி...புராண வரலாறுகளை நாடகமாக அரங்கேற்றிய மாணவர்கள் 

இதில் குறிப்பாக மயிலாடுதுறை சப்த ஸ்வரங்கள் நாட்டிய பள்ளி மாணவிகள் பங்கேற்ற அறுபடை வீடு என்ற தலைப்பில் ஆன நாட்டிய நாடகம் முருகனின் பிறப்பு துவங்கி மனக் கோலம் வரையில், அறுபடை வீடுகளில் புரிந்த திருவிளையாடல்கள் அவ்வை பாட்டிக்கு நாவல் பழம் அளித்த கதை, சூரபத்மனை சம்காரம் செய்தது, தந்தைக்கு ஓங்காரத்தை உபதேசம் செய்தது, வள்ளி தெய்வானை கரம் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்தில் அறுபடை வீடுகளில் பெருமையை 30 மாணவிகள் முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர். இதனை பார்வையாளர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று நாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget