ஓம் சக்தி தாயே.. பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்! ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா ..!
Chengalpattu Temple: பருக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
கும்பாபிசேகம் ( Kumbabhishekam )என்றால் என்ன ?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர் வாக்கு அப்படி கட்டி முடிக்கப்பட்ட கோவில்களுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கும்பாபிசேகம் ( அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும். எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது.
இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.