சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்ட மீனாட்சியம்மன் கோயில் மீண்டும் திறப்பு - பக்தர்கள் தரிசனம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கோபுர வாசலில் நின்றவாறு வணங்கி சென்றனர்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. வாசலில் நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கோபுர வாசலில் நின்றவரை வணங்கி சென்றனர்.
உலகம் போற்றும் மீனாட்சியம்மன் கோயில்
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி குடிகொண்டுள்ள மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.
தமிழ் மாத திருவிழா
தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வழிபாடு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள் இன்றுகாலை 5 மணி வரையில் கோவில் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் நள்ளிரவு 01.05 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 02.23 மணிக்கு முடிவடைவதால், சனிக்கிழமையான நேற்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு, நள்ளிரவு 01.44 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து மறுநாள் காலை (ஞாயிற்று கிழமை) வழக்கம் போல் 05.00 மணி முதல் தரிசனம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி, காலை முதல் நடை திறக்கப்பட்டது.
அதேபோன்று இத்திருக்கோயிலின் நிர்வாகத்தில் உள்ள 22 உப திருக்கோயில்களிலும் இதே நேரத்தில் நடை சாத்தப்பட்டு, நடை திறக்கப்பட்டும் பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கோபுர வாசலில் நின்றவரை வணங்கி சென்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு