Lunar Eclipse: கிரகணத்தின்போது கோயில் நடைகள் சாத்தப்படுவது ஏன்..? ஏன் சாப்பிடக்கூடாது..? முழுவிவரம்!
இன்றைக்கு சந்திர கிரகணத்தை முன்னிட்டு பணக்கார கடவுளான திருப்பதி முதல் வடபழனி முருகன் கோயில் வரை நடை அடைக்கப்படுகின்றன.
பகுதி சூரிய கிரகணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இந்தியா மற்றும் உலகின் சில பகுதிகளில் இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்வு தோன்றுகிறது. இது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.
இந்தியாவில் இன்று நிகழும் முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.29 மணிக்கு முடிவடைக்கிறது. தமிழ்நாட்டில் முழு சந்திர கிரகணம் மதியம் 3.46 மணிக்கு தொடங்கி மாலை 5.11 மணி வரை நடைபெறும்.
கிரகணம் என்றால் என்ன..?
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திப்பே கிரகணம் என்று அழைக்கிறோம். சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கும்போது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும்போது அது சந்திர கிரகணம் என்றும் அழைப்படும்.
கிரகணத்தின்போது கோயில் நடைகள் ஏன் சாத்தப்படுகிறது..?
உலகத்தில் நிகழும் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் இயற்கையான நிகழ்வுகள் என்றாலும், இந்துகளின் மத்தியில் அவை மிகப்பெரிய நம்பிக்கைகளை கொண்டுள்ளது. அதன்படியே இந்துகள் கிரகணத்தின்போது உணவு அருந்தவும், கோயில் செல்லவும் தவிர்க்கின்றனர்.
இன்றைக்கு சந்திர கிரகணத்தை முன்னிட்டு பணக்கார கடவுளான திருப்பதி முதல் வடபழனி முருகன் கோயில் வரை நடை அடைக்கப்படுகின்றன. அதற்கு காரணம், வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, அறிவியல் ரீதியாக பல சான்றுகளும் உள்ளது.
கோயில் என்பது வெறும் சிலைகளும், மண்டபங்கள் மட்டும் நிரம்பியுள்ள இடங்கள் அல்ல. முழுக்க முழுக்க பாசிடிவ் எனர்ஜி இருக்கும் இடம். அதன் காரணமாக பொதுமக்கள் மன அமைதிக்காகவும், தங்கள் குறைகளை கூறவும் வருகின்றனர். கிரகண நாட்களின்போது நெகட்டிவ் எனர்ஜி அதிகமாக வெளிபடும். அந்த தாக்கம் கோயிலையும், பக்தர்களையும் எந்தவிதத்திலும் தாக்க கூடாது என்ற நம்பிக்கையில் சாத்தப்படுகிறது.
கிரகணம் முடிந்த கையோடு, அனைத்து கோயில்களிலும் சுத்தமாக கழுவி விட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதேபோல், மூலவர் சிலைக்கு வீரியம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக துளசி மாலைக்கள் கொண்டு அலங்காரம் செய்வர். ஏனென்றால் துளசி இலை நெகட்டிவ் எனர்ஜியை எடுத்துக்கொள்ளும் நன்மையை கொண்டது. மேலும், சந்திர கிரகணத்தின்போது கெட்ட கதிர்வீச்சுகள் வெளிவரும். அதையும் துளசி உறிஞ்சும் தன்மை கொண்டது.
உணவு உட்கொள்ளக் கூடாது ஏன்..?
கிரகணத்தின்போது அதிகப் படியான கெட்ட கதிர்வீச்சுகள் வெளியேறும். அந்த நேரத்தில் உணவு சாப்பிடும்போது அஜீரணக் கோளாறு ஏற்படலாம். பெரும்பாலான வீடுகளில் கிரகணத்தின்போது சமைக்க மாட்டார்கள். உணவுகளை கெட்ட கதிர்வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.
அப்படி வீடுகளில் உணவு சமைத்து இருந்தால் அவற்றை காக்க முன்னே கூறியதுபோல் துளசி இலையை போட்டு வைப்பார்கள். இதனால் தீங்குவிளைக்கும் பாக்டீரியா மற்றும் கதிர்வீச்சுகளை அவை தடுக்கும்.
சந்திர கிரகணம் : இன்று கோயில் நடைகள் மூடல்
சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடை மூடப்படுகிறது. இன்று காலை 8 மணிமுதல் இரவு 7.20 மணிவரை கோயிலின் கதவுகள் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிற்பகல் 1 மணிக்கு நடை மூடப்பட்டு இரவு 7 மணிக்கு திறக்கப்படுகிறது.
இன்று பகல் 12 மணிமுதல் மாலை 7 மணிவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நடை சாத்தப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்தபின் பிற்பகல் 2:30 மணிக்கு அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும் எனவும் அன்று காலை 11:30 மணி முதல் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை இயங்காது எனவும் அனைத்து டிக்கெட்டுகளும் நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.