மேலும் அறிய
Advertisement
விபூதியின் நறுமணம்.. அரோகரா கோஷம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா
திருக்கோவில் உள் மற்றும் வெளிபிரகாரங்கள், நந்தி மண்டபம் ஆகிய இடங்களில் சிவன் மற்றும் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு அதன் மீது திருவிளக்குகளை ஏற்றி ஒளிவிட்டு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாரையும் வணங்கி வழிபாடு
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தை ஒட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்களில் லட்சதீப விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டிற்கான லட்சதீப விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவர் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதே போல திருக்கோவில் உட்பிரகாரத்தினை சுற்றியுள்ள லிங்களுக்கு அபிஷேகங்களானது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்நு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு தூப,தீப ஆராதனைகளானது நடைபெற்றது.
இந்த லட்ச தீபம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகைதந்து கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களிலும், நந்தி மணிடபம் ஆகிய இடங்களில் பல்வேறு வடிவிலான கோலமிட்டு அதன் மீது விளக்குகளை ஏற்றியும், அதேபோல சிவ வடிவிலான கோலங்கள் வரைந்து அதன் மீது திருவிளக்குகளை வைத்து சிவ வடிவில் தீபங்களை ஒளிர செய்தும் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஏகாம்பரநாதர் கோவில் மாமரம்
உலக பிரசித்தி பெற்ற,பஞ்ச பூத ஸ்தலங்களில் முதன்மையான மண் ஸ்தலமாக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் விளங்குகிறது.இத்திருக்கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். சுற்றுல்லா ஸ்த்தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் மனமருகி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு. அந்த வகையில், பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஸ்தவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் உள்ளது. இம்மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு 4 வேதங்களை குறிக்கும் தெய்வீக மாமரம் என சொல்லப்படும் இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகின்றன, என பக்தர்கள் மற்றும் பொதுமக்களால் நம்பப்படுகிறது.
இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார். இதன் சிறப்பு அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்லப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு பல ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் இனி நிம்மதியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
மேலும் மகப்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். தற்போது, இம்மாமரத்தில் 4 சுவையுடன் கூடிய மாங்கனிகள் காய்க்கத் தொடங்கி உள்ளது. இந்த அதிசய மாமரத்தினை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பார்த்து வியந்து சென்று வருகின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion