மேலும் அறிய

தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி

இந்த பண்டிகையை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கிய இந்த பண்டிகையை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று ஆலயங்களில் வழிபடுவது வழக்கம். எருசலேம் நகரில் கோவேரி கழுதையில் பவனியாக வந்த இயேசுகிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று ’தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா“ என்று முழங்கியதை நினைவு கூரும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. பவனியை தொடர்ந்து குருத்தோலைகளை தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச்சென்று அடுத்த ஆண்டு சாம்பல் புதன் நாள் வரை பாதுகாப்பாக வைத்திருந்து வழிபடுவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சை தூய இருதய பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெறுகிறது. வியாகுலமாதா ஆலய முகப்பில் இருந்து குருத்தோலைகள் புனிதம் செய்யப்பட்டு தூய இருதய பேராலயம் வரை பவனியாக வந்து அங்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அமர்தீப்மைக்கேல், டோமினிக், குருக்கள் சாமிஅடிகள், சூசைமாணிக்கம், ஆரோக்கிய வினிட்டோ, ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் திரு இருதய ஆலயத்தில் நடந்த ரத்ததான முகாமில் மறைமாவட்ட ஆயர் சகயாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் பெஞ்சமின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி ஆலய வளாகத்தில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கி சோழன்சிலை வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி-தஞ்சை திருமண்டல கல்விக்குழு செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.

இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை 8 மணிக்கு பாஸ்டர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி சபை குரு சாமுவேல்கிளமெண்ட், சபை குரு செயலாளர் சார்லி மனோகரன், பொருளாளர் ஜவகர் மற்றும் சபை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனி ஆலய வாயிலில் இருந்து தொடங்கி வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

தஞ்சை குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி திருத்தல அதிபர் சுரேஷ்குமார் தலைமையில் புறப்பட்டு அடைக்கல மாதா அன்னை ஆலயத்தை அநை்தது. அங்கு குருத்தோலை ஞாயிறு வழிபாடு பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையிலும், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரியசூசை தலைமையிலும், மானம்புச்சாவடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையிலும், வடக்குவாசலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை டேனியல் தலைமையில் நடைபெற்றது.

இதே போல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
Embed widget