கரூர்: ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண வைபவம் - பக்தர்கள் சாமி தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கும், உன்மத்த பைரவர் சுவாமிக்கும், உற்சவர் சுவாமிகளுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.
ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண வைபவம்.
கரூரில் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ உன்மத்த வாராஹி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கும், உன்மத்த பைரவர் சுவாமிக்கும், உற்சவர் சுவாமிகளுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து ஆலய அருகே பிரத்தியேக மேடையில் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.
அதை தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு பெண் வீட்டார் அழைப்பு நடைபெற்ற பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி தொடர்ந்து மூலவர் வாராகி அம்மன் மற்றும் உற்சவர் ஸ்ரீ உன்பத்த வாராஹி சமேத ஸ்ரீ உண்மைத்த பைரவர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்கள் மொய் வைக்கும் நிகழ்ச்சியும், பால் பழம் வழங்கும் நிகழ்ச்சியும் அம்மி மிதித்து, அருந்ததிபார்க்கும் நிகழ்ச்சியும், சுவாமிகளுக்கு ஆலாத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனமும் செய்தனர். மினி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஸ்ரீ உன்மத்த வாராகி சமேத ஸ்ரீ உன்மத்த பைரவர் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் கார்த்திக் சிறப்பான முறையில் இருப்பார்கள் செய்திருந்தார்.