கரூர் ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்த பிறகு ஆலயத்தில் அருகே முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கு மகா தீபாராதனை.
வாங்கப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா.
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் அம்பேத்கார் நகரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கருப்பணசுவாமி, ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பாலாகி அம்மன் உள்ளிட்ட சுவாமி மற்றும் ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ பொம்மி அம்மாள் சமேத ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷே விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்த பிறகு ஆலயத்தில் அருகே முதல் கால யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலச குடங்களை தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார். அதை தொடர்ந்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் கோபுரகாசத்திற்கு மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கருப்பணசுவாமி, ஸ்ரீ முனீஸ்வரன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பாலாஜி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.