(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்புஅபிஷேகம்
தை மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற தை மாத முதல் வெள்ளி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தை மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கரூர் நகரப் பகுதியான அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சல் மஞ்சள் சந்தனம் ,விபூதி, பன்னீர், அபிஷேகபெடி, உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிபாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற தை மாத முதல் வெள்ளி சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.