கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தை அவதார திருநாள் பவனி விழா
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தை சுற்றி கருவூரார் சித்தர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூரார் சித்தர் அவதாரத் திருநாள் கருவூரார் சித்தர் திருத்தேரில் பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கருவூரார் சித்தர் அவதார திருநாளை ஆலயத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று கருவூரார் சித்தருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு கருவூரார் அவதார திருநாளை முன்னிட்டு தேர்பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு பிரத்யேகமாக உள்ள கருவூரார் திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து பஞ்ச கற்பூர ஆராத்தி உடன், மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு கருவூரார் சித்தர் திருத்தேர் பவனி விழா துவங்கியது.
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தை சுற்றி கருவூரார் சித்தர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தார். கருவூரார் சித்தர் சித்திரை மாத அஸ்த நட்சத்திரம் நட்சத்திர அவதார திருநாளை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து கருவூரார் சித்தரை தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்