அய்யர்மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் அன்னபூரணி அட்சய அன்னதான கூடம் துவக்க விழா
விழாவில் கொல்லிமலை சித்தர் ஜெயராஜ் மகராஜ், சீனிவாசநல்லூர் ஜெ. பகவதி புகழேந்தி உள்ளிட்ட சிவனடியார்கள் சிவ பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் அன்னபூரணி அட்சய அன்னதான கூடம் துவக்க விழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அன்னபூரணி அட்சய அன்னதான கூடம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வேங்காம்பட்டி சுப்ரமணிய தேசிகர் தலைமை வகித்தார். விழாவில் திட்ட மேலாளர் ராஜசேகரன் வரவேற்றார். அன்னதான கூடத்தை உளுந்தூர்பேட்டை அப்பர் மட நிர்வாகி ஸ்ரீலஸ்ரீ தேசிக சிவஞான சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினார். விழாவில் கொல்லிமலை சித்தர் ஜெயராஜ் மகராஜ், சீனிவாசநல்லூர் ஜெ. பகவதி புகழேந்தி உள்ளிட்ட சிவனடியார்கள் சிவ பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜெ.ஸ்ரீலா கடம்பன் செய்திருந்தார்.
கரூர் அனுஷம் குழுவினர் சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நிகழ்ச்சி மற்றும் சங்காபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேட்டுத்தெருவில் உள்ள பூஞ்சோலை செட்டியார் மண்டபத்தில் கரூர் அனுஷம் குழுவினரின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டும், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தினை முன்னிட்டும் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு சங்காபிஷேக நிகழ்ச்சி மற்றும் காஞ்சி மகா பெரிய அவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டது.
முன்னதாக திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை சிவனடியார்கள் மற்றும் பக்தர்களால் நடத்தப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் அனுஷம் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.