மேலும் அறிய

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாம முழக்கமிட்டும், மகாலட்சுமி தாயே என்று என்றும் கோஷம் எழுப்பினர்.

கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். 

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை குலதெய்வமாகவும் குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் வழிபாட்டு வருகின்றனர். இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைக்க நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி 19 அன்று தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் ஆடி மாதம் 1 ம் தேதி தங்களது விரதத்தை தொடங்குவார். அதனைத் தொடர்ந்து 18 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் ஆடி 19 ஆம் தேதி அன்று மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

முன்னதாக ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடி 19 காலை சுவாமி மகாலட்சுமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா கண்டு கோவிலை வந்தடைந்தார். பின்னர் சுவாமி அம்பாளுக்கு பரம்பரை பூசாரி ஆணி கால் அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டத்தை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோயிலை வலம் வந்தனர்.

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பெரிய பூசாரியின் மேல் அம்மன் அருள் வந்து இறங்கியதும் சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழு பேரும் குறும்ப கவுண்டர்கள் 7 பேரும் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டு பின்னர் வரிசையாக அமைந்திருந்த 1000 க்கு மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாம முழக்கமிட்டும், மகாலட்சுமி தாயே என்று என்றும் கோஷம் எழுப்பினர்.

கரூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

இதில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget