கரூர் தேர் வீதி காயத்ரி அம்மனுக்கு அமாவாசை சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் சாமி தரிசனம்
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு சித்திரை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் தேர் வீதி பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு சித்திரை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினர்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் வசந்த் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.