கரூர்: ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசுவாமி ஆலய கும்பாபிஷேக விழா
கரூர் பண்டுதகாரன்புதூர் அருள்மிகு ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சி கிராமம், பண்டுதகாரன் புதூர் அருள்மிகு ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசுவாமி ஆலய அஷ்டமந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக யாக வேள்விகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து முதல் காலயாக வேள்வி, இரண்டாம் காலயாக வேள்வி என மூன்று கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு நேற்று யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பிறகு வான வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க மூன்று காலயாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட தீர்த்த கலச குடத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ தனிக்காட்டு கருப்பண சுவாமி ஆலயம் வந்தடைந்த பிறகு வான வேடிக்கை முழங்க அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு, விபூதி, குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ தனிக்காட்டு கருப்பணசுவாமி ஆலய அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பண்டுத காரன் புதூர் ஊர் பொதுமக்களும் தனிக்காட்டு கருப்பணசுவாமி ஆலய நிர்வாகிகள் சார்பாகவும், சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் கும்பாபிஷேக விழா பிரசாத பை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கரூர் மலைக்கோவிலூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், நாகபள்ளி கிராமம் மலைக்கோவிலூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி ஆலய அஷ்ட பந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு யாக வேள்வி நடைபெற்றது.
ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலச குடத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு விமான கோபுரம் வந்தடைந்தனர். அதைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் விமானத்திற்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து விநாயகர், மூலவர் பகவதி அம்மன், கருப்பண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் பகவதி அம்மனுக்கு பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து பகவதி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் குடிகுண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.