மேலும் அறிய

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடைபெற்றது.

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

 

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

 

அதற்கு முன்பாக ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாக வேள்வியும் நடைபெற்று, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பரிவார தெய்வமான கன்னிமூல கணபதி, ஐயப்பன், பாலமுருகன், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி மாலைகள் அணிவித்தனர்.

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

 

தொடர்ந்து மூலவர் கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

 

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம்.

 

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  கரூர் ரயில்வே காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

 

 


கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்

பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் ரயில்வே காலனி தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

 

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget