![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
![ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் Karur Annasalai Sri Karpaga Vinayagar kovil Krishna Jayanti Abhishekam - TNN ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/26/c922f8f51fe950b4e7b7e57d0c5428601724671718162113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி
பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் கிருஷ்ண பகவானுக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகளுடன், துளசி மாலை அணிவித்து தங்க கவசம் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)