மேலும் அறிய

Kandha Sashti Viratham: முருகனுக்கு அரோகரா! கந்த சஷ்டிக்கு விரதம் இருப்பது எப்படி? பக்தர்ளே இதைப்படிங்க!

Kandha Sashti Viratham Procedure in Tamil: முருகப்பெருமானுக்கு உரிய கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை கீழே விரிவாக காணலாம்.

Kandha Sashti Viratham 2024: தமிழ்க்கடவுளால் பக்தர்களால் போற்றப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்றாக இருப்பது சஷ்டி. மாதந்தோறும் இரு சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி மகா கந்தசஷ்டியாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்ததது இந்த கந்த சஷ்டியில் நிகழ்ந்ததால் இந்த சஷ்டியை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். பொதுவாக, சஷ்டி நாட்களில் பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம் ஆகும்.

கந்த சஷ்டி விரதம்:

நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறத. இந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டிக்கு பக்தர்கள் விரதம் இருப்பது எப்படி? என்று கீழே விரிவாக காணலாம்.

  • தினமும் ஒரு இளநீரை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
  • சஷ்டி திருவிழா கொண்டாடப்படும் ஆறு நாட்களுக்கு வெறும் தண்ணீரை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதமாக இருக்கலாம்.
  • இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால், பழங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
  • இரண்டு வேளை உணவு எடுத்துக் கொண்டு ஒரு வேளை உணவு தவிர்த்து விரதம் இருக்கலாம்.
  • இருவேளை உணவு தவிர்த்து விட்டு ஏதாவது ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
  • சூரசம்ஹாரம் மட்டும் முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து மாலையில் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு உணவு எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

விரதம் கட்டாயமா?

எந்த ஒரு இறைவனுக்கும் பக்தர்கள் தமது பக்தியை காட்டுவதற்காக விரதம் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உள்ளத்தூய்மையே உண்மையான பக்தி என்றே அனைத்து போதனைகளும் உணர்த்துகிறது.

தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டியது அவசியம் கிடையாது.

மிளகு விரதம் என்றால் என்ன?

முருகனை வேண்டி கந்த சஷ்டி திருவிழாவிற்காக இருக்கப்படும் விரதங்களிலே மிகவும் கடுமையான விரதம் மிளகு விரதம் ஆகும். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டி இருப்பவர்கள் இந்த விரதத்தை இருப்பது வழக்கம். மிளகு விரதமானது முதல் நாளில் 1 மிளகு மட்டும் சாப்பிடுவது, 2வது நாளில் இரண்டு மிளகு சாப்பிடுவது, 3வது நாளில் 3 மிளகு சாப்பிடுவது என படிப்படியாக ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்வது ஆகும்.

கந்த சஷ்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவது வழக்கம் ஆகும். கந்த சஷ்டியை முன்னிட்டு கோயில்களில் தற்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget