மேலும் அறிய

Kanchi Brahmotsavam: "கோவிந்தா கோவிந்தா " முழக்கமிட்ட பக்தர்கள்..சூரிய பிரபை காட்சியளித்த வரதர்

Kanchi Varadaraja Perumal Brahmotsavam 2023 : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ இரண்டாம் நாள் மாலை உற்சவம்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ இரண்டாம் நாள் மாலை உற்சவம். சிவப்பு பட்டு உடுத்தி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்.
 
Kanchi Brahmotsavam:
 
காஞ்சிபுரம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் மாலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிவப்பு பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

Kanchi Brahmotsavam:
 
பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, சிவப்பு பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
 
வைகாசி மாத பிரம்மோற்சவம் ( Vaikasi Brahmotsavam 2023 Dates )

ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மோற்சவ விழாவின், இரண்டாம் நாள் காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலா, மாலை சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா.

ஜூன் இரண்டாம் தேதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் காலை கருட சேவை (garuda seva) நடைபெறுகிறது. அன்று மாலை அனுமந்த் வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.

ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீநாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.

பிரம்மோற்சவ விழாவின் , ஆறாம் நாள் காலை தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். ( ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம்) இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மாலை யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.

ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல்  ஆகிய விழா நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை. மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்

பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.

9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்Vijay TVK | பொறுப்பு கொடுத்த விஜய் பொறுப்பில்லாத தவெக மா.செ!ஸ்தம்பித்த சென்னை அம்பத்தூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
Embed widget