காஞ்சிபுரம் பக்தர்களுக்கு அதிர்ச்சி.. பரமபத வாசல் கிடையாதாம்.. கோயில் நிர்வாகம் தகவல்
Vaikunta Ekadasi 2025 : "காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், பரமபத வாசல் தரிசனம் இந்த ஆண்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. "
மார்கழி மாதத்தில் வரும் நாட்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக "வைகுண்ட ஏகாதசி" கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழித்து கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் ஏராளமான முக்தி கிட்டும் என்பது ஐதீகம் ஆகும்.
இதையும் படிங்க: ஆண்கள் எல்லாம் நரகத்தில் சாகட்டும்.அண்ணா பல்கலைக்கழகம் சர்ச்சை குறித்து கார்த்திக் சுப்பராஜ்
வைகுண்ட ஏகாதசி பிறந்தது எப்படி ?
விண்ணுலகத்தில் தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் ஒருவன் அச்சுறுத்தி வந்தான். இதனால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அவனது சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு முரனிடம் போரிட்டார். போரில் மகாவிஷ்ணு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பிறகு மகாவிஷ்ணு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மகாவிஷ்ணுவிடம் தோல்வியை தழுவிய முரன் மகாவிஷ்ணுவை நோக்கி வாளுடன் பாய்ந்து வந்தான்.
இதையும் படிங்க: தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
அப்போது, மகாவிஷ்ணு தன் உடலில் இருந்து மாபெரும் சக்தி ஒன்றை பெண்ணாக வெளிப்படுத்தினார். அந்த பெண் முரனுடன் போரிட்டார். அந்த பெண் முரனை வென்றார். அந்த அசுரனை வீழ்த்தி தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றிய அந்த பெண்ணுக்கு மகாவிஷ்ணு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். முரனை வீழ்த்திய அந்த நாள் ஏகாதசி என்றும், அந்த நாளில் பெருமாளை வணங்குபவர்களுக்கு வைகுண்ட பதவி வழங்கப்படும் என்றும் பெருமாள் வரம் அளித்தார். இந்த நாளே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரத்தின் சிறப்பு
காஞ்சிபுரத்தில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்வதும், ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் வைகுந்த வள்ளி சமேத வைகுந்த பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மார்கழி மாதத்தில் வரும் வைகுந்த ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் பரமபத வாசல் திறக்கப்பட்டு கோவில் கோபுரத்தின் மேல் தளத்தில் உள்ள அரங்கநாதன் பெருமாளை தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது வழக்கம்.
இந்தாண்டு அனுமதி இல்லை
இந்தநிலையில் இந்த ஆண்டு கோயில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை, வைகுண்ட ஏகாதசி என்று உற்சவம் நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.