மேலும் அறிய

kanchipuram: துவங்கியது கோடை உற்சவம்..! அத்திவரதர் கோவிலில் அடுத்த திருவிழா இதுதான்,,!

குங்குமப்பூ சந்தனம் பன்னீர் உள்ளிட்டவைகள் தடவி மலர் போர்வையுடன் காட்சி அளித்த வரதராஜ பெருமாள்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கோடை உற்சவம் துவங்கியது. கோடை உற்சவத்தை ஒட்டி நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுக்கு குங்குமப்பூ, சந்தனம் தடவி, பன்னீர் தெளித்து, மல்லிகை பூ, கனகாம்பரம் பூ, பன்னீர் பூ, பஞ்சவர்ண மாலையுடன், மலர் போர்வை அணிவித்து, மேளதாளம் வாத்தியங்கள் முழங்க,வேத பாராயணம் ஒலிக்க கற்பூர ஆரத்தி  காட்டப்பட்டது.

kanchipuram: துவங்கியது கோடை உற்சவம்..! அத்திவரதர் கோவிலில் அடுத்த திருவிழா இதுதான்,,!
 
கோடை உற்சவத்தின் முதல் நாளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரங்களில் காட்சி அளித்த வரதராஜ பெருமாளையும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் எழுந்தருளிய ஸ்ரீ தேவி பூதேவி வரதராஜ பெருமாளுக்கு கட ஆரத்தி காட்டியதை அடுத்து கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார்.
 
kanchipuram: துவங்கியது கோடை உற்சவம்..! அத்திவரதர் கோவிலில் அடுத்த திருவிழா இதுதான்,,!
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 
 
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக இந்த கோவில் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவிவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன .மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.

 இக்கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுபோக ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் நாள்தோறும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. வட இந்தியாவை சேர்ந்த பக்தர்களும் இந்த கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளை தரிசித்து செல்கின்றனர் காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக முக்கிய பெருமாள் கோவிலாக கோவில் விளங்கி வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அடுத்த மிக பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விளங்கி வருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!
Embed widget