மேலும் அறிய

கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி கோயில் கந்தசஷ்டி பெருவிழா‌

வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய ஆறுமுகம் கொண்ட சண்முக பெருமான் நான்கு ராஜவீதிகள் திருவீதிஉலா

புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி முக்கிய நிகழ்வான 6-ஆம் நாள் சூரசம்ஹார விழா இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கந்தசஷ்டி விழாவின் 6-ஆம் நாள் கந்தசஷ்டி விழாவினையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளானது நடைபெற்று தொடர்ந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மினிடம் வேல் வாங்கும் நிகழாவானது நடைபெற்று ஆறுமுகம் கொண்ட சண்முகபெருமானுக்கு‌ மாலை அபிஷேக ஆராதனையானது நடைபெற்று முழுவதும் வண்ண வண்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு இரவு நான்கு ராஜவீதிகள் வீதிஉலாவானது நடைபெற்றது.

கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி  கோயில்  கந்தசஷ்டி பெருவிழா‌
 
இதனைதொடர்ந்து சூரபத்மன்‌ சண்முகபெருமானுடன் போர்தொடுத்து அதில் மாமரமாக மாறிய மாயவித்தைகாரனான சூரபத்மனை சண்முக பெருமான் அன்னையிடம் பெற்ற வேல் கொண்டு பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்திற்கிடையே வதம் செய்யும் நிகழ்வுகளானது தத்ரூபமாக நடத்தப்பட்டது. இந்த சூரபத்மன் வதத்தில் ஒருபுறம் சேவலாகவும், மற்றொருபுறம் மயிலாகவும் ஆட்கொண்டார். இதனையொட்டி கண்கவர் வானவேடிக்கைகளும் நடைபெற்றது. பின்னர் சண்முகருக்கு தூப,தீப ஆராதனைகளானது விண்ணை முட்டும் அளவிற்கு அரோகரா, சரவண கோஷங்கள் முழக்கத்துடன் நடைபெற்று ஆனந்தமாய் நடனமாடியபடி திருக்கோவில் மண்டபத்தில் எழுந்தருளித்த சண்முகருக்கு கிலோ கணக்கில் பல்வேறு மலர்கள் கொண்டு ஆராதிக்கப்பட்டது.
கந்தபுராணம் அறங்கேறிய காஞ்சி குமரகோட்டம்‌ சுப்பிரமணிய‌ சுவாமி  கோயில்  கந்தசஷ்டி பெருவிழா‌
 
இந்த கந்தசஷ்டி கடைசி நாள் விழாவையொட்டி காலை‌முதலே உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளனோர் வந்திருந்து திருக்கோவில் பிரகாரத்தினை 108 சுற்றுகள் வலம் வந்திருந்து ஆயிர கணக்கான மக்கள் வெள்ளத்தில் சூரசம்ஹார விழாவானது நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி திருக்கோவில் நிர்வாக தரப்பில் தண்ணீர் போன்ற முன்னோற்பாடுகளும்,காவல்துறை தரப்பில் எவ்வித குற்றநிகழ்வுகளும்,அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு 50-க்கும் மேற்பட்ட சீருடை மற்றும் சீருடை அல்லாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
தல வரலாறு
 
மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி. முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரமனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.
 
பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Embed widget