மேலும் அறிய
Advertisement
"நமச்சிவாய நமச்சிவாய" பக்தி பரவசத்தில் காஞ்சிபுரம் - தேர் திருவிழாவை முன்னிட்டு குவிந்த பக்த கோடிகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா ஒட்டி மகாரத உற்சவம்.
ஏழாம் நாள் நடைபெற்ற மகாரத உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பஞ்சபூத தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஶ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் 7ம் நாளான இன்று மகாரதம் எனும் இரத உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மகாரத உற்சவத்தை ஒட்டி ஏகாம்பரநாதர் ஏலவார்குடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து தாமரைப் பூ மல்லிகை பூ மனோரஞ்சிதப்பூ ரோஜாப்பூ மலர் மாலைகளுடள் ஏலக்காய் மலையும் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து 51அடி உயரமுள்ள மகா ரதத்தில் எழுந்தருள செய்து தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் ஒலிக்க, சிவனடியார்கள் ஆட்டத்துடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வடத்தை பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி நகரின் 4 ராஜ வீதிகளில் மகாரதம் வலம் வந்தது. மகாரத உற்சவத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்து மகா ரதத்தின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். மகாரத உற்சவத்தை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion