Kanchi Brahmotsavam: தயாரானது தேர்..! சுத்தம் செய்த தீயணைப்புத்துறையினர்..! காஞ்சிபுரம் மக்களே தயாரா ?
Kanchi Brahmotsavam 2023: வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
வைகாசி மாத பிரம்மோற்சவம் ( vaikasi brahmotsavam 2023 dates )
மே மாதம் 31ஆம் தேதி புதன்கிழமை , பிரம்மோற்சவம் முதல் நாள் காலை தங்கச் சப்புரத்தில் சுவாமி வீதி உலா, மாலை சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறார்.
ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மோற்சவ விழாவின், இரண்டாம் நாள் காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலா, மாலை சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா.
ஜூன் இரண்டாம் தேதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் காலை கருட சேவை (garuda seva) நடைபெறுகிறது. அன்று மாலை அனுமந்த் வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாள் காலை சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளிக்கிறார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
ஜூன் நான்காம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள். அதிகாலை தங்க பல்லாக்கு வாகனத்தில் (ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்) காட்சியளிக்கிறார். மாலை யாளி வாகனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
பிரம்மோற்சவ விழாவின், ஆறாம் நாள் காலை தங்கச் சப்பரத்தில் காட்சியளிக்கிறார். ( ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோலம் ) இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது . மாலை யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
ஏழாம் நாள் திருத்தேர் ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் (kanchipuram vaikuntha perumal chariot ) எழுந்தருதல் மற்றும் திருத்தேரில் இருந்து எழுந்தருதல் ஆகிய விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள், திருபாதஞ்சாவடி திருமஞ்சனம் திருமண்காப்பு சேவை .மாலை குதிரை வாகனத்தில் காட்சியளிக்கிறார்
பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாள் பல்லாக்கு, மட்டை அடி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இரவு புண்ணியகோடி விமானத்தில் காட்சியளிக்கிறார்.
9ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவ விழாவில், பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம் காட்சியளிக்கிறார்.