Vastu Tips: குடும்பத்துல அடிக்கடி சண்டை வருதா? - வாஸ்து பிரச்னையா இருக்கலாம்.. இதைப் படிங்க!
குடும்பத்தில் பிரச்னைகள் வருவது சகஜம். உணர்வுப்பூர்வமாக எழும் பிரச்னைகள் இருந்தாலும் வாஸ்து குறைபாடு காரணமாகவும் பிரச்னைகள் உண்டாகலாம் என்பது ஐதீகமாக உள்ளது.

பொதுவாக ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்கள் வாஸ்து சாஸ்திரத்தை தீவிரமாக பின்பற்றுவார்கள். நிலத்தை அடிப்படையாக கொண்டு இந்த காலக்கட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் பார்க்கப்படுகிறது. வாஸ்துபடி வீட்டின் வாசல் தொடங்கி கதவு, ஜன்னல், இருக்கைகள், புகைப்படங்கள், செடிகள், உடைகள் என எல்லாம் சரியாக இருந்தால் நமக்கும், குடும்பத்தினருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது என நம்பப்படுகிறது. ஆனால் ஏதேனும் ஒரு விஷயம் தவறாக இருந்தால் நம்முடைய மொத்த வாழ்க்கையையும் தலைகீழாக திருப்பி போடும் சக்தி வாஸ்துவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் குடும்பத்தில் பிரச்னைகள் வருவது சகஜம். உணர்வுப்பூர்வமாக எழும் பிரச்னைகள் இருந்தாலும் வாஸ்து குறைபாடு காரணமாகவும் பிரச்னைகள் உண்டாகலாம் என்பது ஐதீகமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை விரும்புன் நிலையில் சில வாஸ்து குறைபாடுகளை சரி செய்தால் வீட்டில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நாம் பேண முடியும். அதனைப் பற்றிக் காணலாம்.
இந்த வாஸ்து விஷயங்களில் கவனம்
சாஸ்திரங்களின்படி, ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை தெய்வங்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுவே பூஜை அறைக்கு சிறந்த திசையாகும். இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.
வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கலாம் என நீங்கள் யூகித்தால் ஒவ்வொரு மூலையிலும் சிறிது கல் உப்பை வைத்து ஒவ்வொரு மாதமும் அதை மாற்றலாம். இந்த பரிகாரம் குடும்பத்திற்குள் நிலையான நேர்மறை மற்றும் அமைதியான சூழ்நிலையை உறுதி செய்யும் என நம்பப்படுகிறது. வீட்டின் வடகிழக்கு மூலையில் புத்தர் சிலையை நிறுவுவது நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்.
ஒரு வீட்டின் பிரதான கதவு அதன் கட்டிடக்கலை பாணியில் இல்லாமல் கட்டக்கூடாது. மேலும் வாசலில் எந்த குப்பையும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் லட்சுமி தேவி வாசம் செய்வால் என்பது நம்பிக்கையாகும். வீட்டு வாசலில் துளசி, மணி பிளாண்ட், அசோக மரம் அல்லது மல்லிகை போன்ற செடிகளை நடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
வீட்டின் படுக்கையறையில் தூங்கும் போது, நம் தலையை தெற்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்திருக்க வேண்டும். மேலும் படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் வீட்டின் ஒவ்வொரு அறையும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது நம் வீட்டுக்கு லட்சுமி செய்து வாசம் செய்து அங்கேயே தங்க வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிகம் மற்றும் வாஸ்து நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)





















