கரூர்: அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பெரிய கும்பிடு விழா - பக்தர்கள் சாமி தரிசனம்
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது உடன் ஒயிலாட்டத்துடன் தீர்த்தக்காவடி,வான வேடிக்கைகள் முழங்க எடுத்துச் சென்றனர் வழிநெடுகிலும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னதாராபுரம் அருகே சூடாமணி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பெரிய கும்பிடு விழா முன்னிட்டு ஒயிலாட்டம் மற்றும் தீர்த்த காவடி உடன் அம்மன் திருவீதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை பெரிய கும்பிடு விழா முன்னிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திருவிழா தொடங்கிய நிலையில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது உடன் ஒயிலாட்டத்துடன் தீர்த்தக்காவடி,வான வேடிக்கைகள் முழங்க எடுத்துச் சென்றனர் வழிநெடுகிலும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மதுரை பாண்டிச்சாமி புராண கதை நாடகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை புக்கராண்டி கருப்பணசாமிக்கு கெடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய குடிப்பாட்டுகள் கொரப்பட்டியார் குலம், மற்றும் அம்மன் இளைஞரணி சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்