மேலும் அறிய

திருச்சி புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு

திருச்சி புறநகர் பகுதிகளில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.

மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலை, திருப்பைஞ்சீலி கணேசபுரம், அம்பேத்கார் நகர், திருவெள்ளறை, அய்யம்பாளையம், சமயபுரம் செல்லும்ரோடு உள்பட 27 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் நேற்று கரைக்கப்பட்டன. இதேபோல், சமயபுரம் நால்ரோடு, ராசையன் கோவில், இருங்களுர், நெய்குப்பை, ஆர்.வளவனூர், எசனகோரை, அப்பாத்துரை உள்ளிட்ட 15 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அங்குள்ள வாய்க்கால்களில் கரைத்தனர். சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிறுகனூர், புதூர்உத்தமனூர், தச்சங்குறிச்சி, குமுளுர், பி.கே.அகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அந்தப் பகுதிகளில் உள்ள குளம், ஏரி மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடபடவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளது, அதேசமயம் கட்டுப்பாடுகள் விலக்கியதால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடினர். 

திருச்சி புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள்  ஆற்றில் கரைப்பு

மேலும் உப்பிலியபுரம், சோபனபுரம், வெங்கடாசலபுரம், கொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள், ஆட்டோக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அய்யாற்றின் நீரோட்டமுள்ள புளியஞ்சோலை, கல்லாத்துக்கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய இடங்களில் கரைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தா.பேட்டை, மேட்டுப்பாளையம் தேவானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று முசிறி காவிரி ஆற்றில் கரைத்தனர். கல்லக்குடி, புள்ளம்பாடி, ஆலம்பாடிமேட்டூர். எம்.கண்ணனூர், மால்வாய், மேலரசூர், ஒரத்தூர், கீழரசூர், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், ஆலங்குடிமகாஜனம், வ.கூடலூர், கல்லகம், முதுவத்தூர், பு.சங்கேந்தி, வெங்கடாசலபுரம் உள்பட 30 கிராமங்களில் கிராமபொதுமக்கள், பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்புகள், விநாயகர் குழு அமைப்புகள் சார்பில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அவைகள் நேற்று டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

திருச்சி புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள்  ஆற்றில் கரைப்பு

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு திருவெறும்பூர் சோழமாதேவி, கக்கன் காலனி, பர்மா காலனி ,துவாக்குடி, அசூர், பொய்கைகுடி, பூலாங்குடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேங்கூர் அருகே உள்ள பூசத்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகள் பரிசல்துறை ரோடு, கொக்குவெட்டியான் கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட காவிரி ஆற்று படித்துறைகளில் போலீஸ்பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம், மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, தோப்புபட்டி, உள்ளிட்ட 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலைகள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் புத்தாநத்தம் கடை வீதி, இடையப்பட்டி வழியாக சென்று இடையப்பட்டியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget