மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

vinayagar chaturthi: '32' வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்...! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை...!!

vinayagar chaturthi: '32' வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

விநாயகனே...
வினை தீர்ப்பவனே….
வேழ முகத்தோனே...
ஞால முதல்வனே..
 
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே நாம் எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் முழு முதல் கடவுளாய் நம்மை ஆசீர்வதித்து... நடக்கின்ற காரியங்களை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும் மங்களகரமான  ஞானமூர்த்தி நம் ”விநாயகர்”...!!!

 விநாயகருக்கு  32 விதமான முகங்கள் இருக்கின்றன.  அதன்படி,  'சோடச கணபதி'  என்று 16 வகைகளுடனும்,  அடுத்த ’ஏக விம் சதி’ என்ற 16 வகைகளுடனும் பக்தர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக,  காணக்கிடைக்காத ரூபங்களில் நமக்கு காட்சியளிக்கிறார்.  அந்த சொரூபத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

விநாயகரின் 32 விதமான முகங்கள்

1. பால கணபதி, 
2. தருண கணபதி, 
3. பக்தி கணபதி,
4. வீர கணபதி, 
5. சக்தி கணபதி, 
6. துவிஜ கணபதி,
7. சித்தி கணபதி,
8. உச்சிஷ்ட கணபதி, 
9. விக்ன கணபதி, 
10. க்ஷிப்ர கணபதி, 
11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி,
13. மகா கணபதி, 
14. விஜய கணபதி, 
15. நிருத்த கணபதி,
16. ஊர்த்துவ கணபதி,
17. ஏகாட்சர கணபதி, 
18. வர கணபதி, 
19. த்ரயக்ஷர கணபதி, 
20. சிப்ரப்ரசாத கணபதி, 
21. ஹரித்ரா கணபதி, 
22. ஏகதந்த கணபதி, 
23. சிருஷ்டி கணபதி, 
24. உத்தண்ட கணபதி, 
25. ருணமோசன கணபதி,
26. துண்டி கணபதி, 
27. துவிமுக கணபதி, 
28. மும்முக கணபதி,
29. சிங்க கணபதி, 
30. யோக கணபதி, 
31. துர்க்கா கணபதி, 
32. சங்கடஹர கணபதி

32 முகங்களின் விவரங்கள்:

1.  பாலகணபதி

உருவத்தில் குழந்தை போல காட்சியளிப்பார். சிவந்த  நிறத்தில்  கையில் வாழைப்பழம்,  பலாப்பழம், கரும்பு, மாம்பழம் ஆகியவற்றை தன் ’நான்கு’ கரங்களில்  ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கிறார்.

2. தருண கணபதி

கையில் பாசம், அங்குசம், கரும்புத் துண்டு, ஒடிந்த தந்தம்,  மோதகம், விளாம்பழம், நெற்கதிர்கள், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரத்தில் ஏந்தியவர், சிவப்பு நிற திருமேனியோடு நமக்கு காட்சி அளிக்கிறார்.

3. பக்தி கணபதி

வெண்ணிற மேனியோடு நமக்கு காட்சி அளிக்கும் பக்தி கணபதி தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயாசக் கிண்ணம் ஆகியவற்றை தனது நான்கு திருக்கரங்களில் வைத்திருப்பவராக அமர்ந்திருக்கிறார்.

4. வீர கணபதி:

வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை  தன்னுடைய 16 திருக்கரங்களில் ஏந்தியவாரு காட்சியளிக்கும் வீர கணபதி, சிவந்த திருமேனியை உடையவர்.

5. சக்தி கணபதி :

மஹா சக்தியை உடையவரான சக்தி கணபதி, சிவந்த நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.  பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். 

6. துவிஜ கணபதி :

தன் திருக்கரங்களில் அட்சமாலை, புத்தகம், தண்டம், கமண்டலம்,  ஆகியவற்றை ஏந்தியவராக இருப்பவர் துவிஜ கணபதி. 4 முகங்களுடன் வெண்மையான திருமேனியை உடையவாராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

7. சித்தி கணபதி :

 தன் துதிக்கையில் மோதகத்தை ஏந்தியவராக,  பசுமையுடன் பொன் நிறம் கலந்த சித்தி விநாயகர்,  பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

8. உச்சிஷ்ட கணபதி :

பெண்ணின் திருமேனியில் தன் துதிக்கையை வைத்து காட்சியளிக்கும் உச்சிஷ்ட கணபதி,  நீல நிறமுடையவர். இரண்டு கரங்களில் நீலோத்பவ மலர்களும், மற்றதில் மாதுளம் பழம், நெற்கதிர், அட்சமாலை, வீணை ஆகியவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியவர் 6 கரங்களை உடையவர்.


 9. விக்ன கணபதி :

சக்கரம், சங்கு, கோடாரி, கரும்பு வில், புஷ்ப பாணம், ஒடிந்த தந்தம், பாணம், பூங்கொத்து, புஷ்ப பாணம், மாலை, பாசம், ஆகியவற்றை தன் 10 திருக்கரங்களில் ஏந்தியவாறு நமக்கு காட்சி அளிக்கும் விக்ன கணபதி, பொன்னிற திருமேனியை உடையவர்.

10. ஷிப்ர கணபதி :

ஷிப்ர கணபதி  ஒடிந்த தந்தம், பாசம், கற்பகக் கொடி, அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தியவராக, ரத்ன கும்பத்தை துதிக்கையில் வைத்து, சிவந்த மேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

11. ஹேரம்ப கணபதி:

ஹேரம்ப கணபதி தனது 10 கரங்களில் இரண்டு கரத்தில் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையோடும்,மீதமுள்ள கரங்களில் பரசு, பாசம், தந்தம், சம்மட்டி, மாலை, அட்சமாலை மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். இவர் ஐந்து முகங்களை கொண்டவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

12. லட்சுமி கணபதி :

கற்பகக் கொடி, கலசம், அங்குசம், பாசம், கட்சம், கிளி, வரதம், மாதுளம் பழம் ஆகியவற்றை தனது 8 திருக்கரங்களில் ஏந்தியவர், நீல நிற தாமரைப் பூவை தனது கையில் வைத்திருப்பவர். மேலும் இரு தேவிகளுடன் காட்சியளிக்கும் லட்சுமி கணபதி வெண்மை நிறமுடையவர்.

13. மகா கணபதி :

பத்து கைகளையும், 3 கண்களையும், முடியில் பிறைச்சந்திரனை உடையவர் நம் மகா கணபதி...
தாமரை மலரை ஏந்திய தேவியை தனது இடது தொடையில் அமரவைத்து அருள் பாலிக்கும் கணபதி. கரங்களில் கரும்பு, வில், கதை, பாச, சக்கரம், தந்தம், ரத்ன கலசம்,மாதுளை நெற்கதி, நீலோத்பலம், ஆகியவற்றை ஏந்தி இருப்பாவராக நமக்கு காட்சி அளிக்கிறார். சிவப்பு நிற திருமேனியை உடையவர்.

14. விஜய கணபதி :

பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

15. நிருத்த கணபதி :

கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நிருத்த கணபதி...  பொன் நிற திருமேனியை உடையவர். , அங்குசம், பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தன் 6 திருக்கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார். இவரை நாம் கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பதுண்டு.

16. ஊர்த்துவ கணபதி :

 தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கியவராக விளங்கும் ஊர்த்துவ கணபதி தங்கம் போல் ஜொலிக்கும் திருமேனியை உடையவர். மேலும் பச்சை நிறமுடைய தேவையை அணைத்தவாறு, பணாம், தந்தம், கரும்பு, தாமரை, வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தியவராக காட்சி அளிக்கிறார்... 

17. ஏகாட்சர கணபதி :

பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நமக்கு காட்சி அளிக்கும் ஏகாட்சர கணபதி, செம்மலர் மாலையை அணிந்து , முடியில் பிறைச்சந்திரனை சூடி, மூன்று கண்களும், செந்நிற திருமேனியுடன் நமக்கு அருள் பாலிக்கிறார்.

18. வர கணபதி:

பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு... அதேபோல செந்நிற திருமேனியை உடைய வரகணபதி, தனது 4 கரங்களில் அங்குசம், பாசம், அமுதக்கிண்ணம், கொடியை தாங்கி இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார். 

19. திரயாக்ஷர கணபதி:

 பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கும் இவர் பொன்னிற திருமேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

20. க்ஷிப்ரபிரசாத கணபதி :

தனது 6 திருக்கரங்களில் தர்ப்பை, பாசம், தாமரை,  அங்குசம் ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும் கொண்ட இவர் பெரிய வயிற்றினை கொண்டவர். அதேபோல துதிக்கையில் மாதுளம் பழத்தையும், திருமேனி முழுவதும் ஆபரணங்களையும் சூடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

21. ஹரித்ரா கணபதி:

மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும் ஹரித்ரா கணபதி, அங்குசம், பாசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார்.

22. ஏகதந்தி கணபதி:

நீல நிற திருமேனியை உடைய ஏகாந்த கணபதி கையில் கோடரி, தந்தம், அட்சமாலை, லட்டு ஆகியவற்றை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

23. சிருஷ்டி கணபதி:

செந்நிற திருமேனியையுடைய சிருஷ்டி கண்பதி தன் நான்கு திருக்கரங்களில் அங்குசம், பாசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவராக... பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

24. உத்தண்ட கணபதி:

 பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை தனது பத்து திருக்கரங்களில் வைத்திருப்பவராக அருள்பாலிக்கும் உத்தண்ட கணபதி.  இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

25. ரணமோசன கணபதி:

செந்நிறப் பட்டாடை உடுத்திய நம் ரணமோசன கணபதி வெண்பளிங்கு திருமேனியுடையவர்.  தன் திருக்கரங்களில், அங்குசம், பாசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்.

26. துண்டி கணபதி:

தன்னுடைய 4 கரங்களில் ரத்ன கலசம்,கோடரி அட்சமாலை இவைகளோடு ஒடிந்த தந்தத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் துண்டி கணபதி மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

27. துவிமுக கணபதி:

 பசுமையான நீல நிறமுடையவர் துவிமுக கணபதி...  செம்பட்டாடை உடுத்தியவராக... தன்னுடைய 4 திருக்கரங்களில் பாசம், தந்தம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்.

28. மும்முக கணபதி:

பொற்றாமரை ஆசனத்தில்  அமர்ந்து 3 முகத்துடன் நமக்கு காட்சியளிக்கும்  மும்முக கணபதி . சிவந்த மேனியை உடையவர். தன்னுடைய கைகளில் அங்குசம், பாசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராக நமக்கு அருள்பாலிக்கிறார்.

29. சிங்க கணபதி:

வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் சிங்க கணபதி, தனது 6 திருகரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர், தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும் ஏந்தியவராக நமக்கு அருள்பாலிக்கிறார். இவர் சிங்கத்தை வாகனமாக கொண்டவர். 

30. யோக கணபதி:

 நீல நிற ஆடையை தரித்தவரான யோக கணபதி... சிவந்த நிறமுடையவர்...  கைகளில் பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் நமக்கு அருள்பாலிக்கிறார்.

31. துர்க்கா கணபதி:

துர்கா கணபதி தன் எட்டு திருக்கரங்களில் பாசம், அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம்,கொடி, வில், நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் இவர் பொன்னிறமுடையவர்.

32. சங்கட ஹர கணபதி:

தன்னுடைய இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியோடு காட்சியளிக்கும் சங்கட ஹர கணபதி. நீல நிற ஆடை அணிந்தவறாக செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், பாசம், அங்குசம்,பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்ய கோரிக்கை !
மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்ய கோரிக்கை !
மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கும் இஸ்லாமியர் !
மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கும் இஸ்லாமியர் !
Chitra Pournami: சித்ரா பெளர்ணமி அன்று பர்வதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. யாருக்கெல்லாம் தடை - புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
சித்ரா பெளர்ணமி அன்று பர்வதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. யாருக்கெல்லாம் தடை - புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
மானாமதுரையில் ஆனந்தவல்லி – சோமநாதர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் !
மானாமதுரையில் ஆனந்தவல்லி – சோமநாதர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!
TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TVK Vijay: இரட்டை இலக்கத்தில் தவெக! ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா விஜய்? எக்ஸிட் போல் முடிவுகள்
TN Election 2026: எம்ஜிஆர் டூ கமல் வரை! பிரபலங்கள் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு?
TN Election 2026: எம்ஜிஆர் டூ கமல் வரை! பிரபலங்கள் முதல் தேர்தலில் வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு?
Delhi High Court: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.! நேரலை விசாரணையின் போது ஓடிய ஆபாச படம்; அதிர்ந்த நீதிபதிகள்.!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு.! நேரலை விசாரணையின் போது ஓடிய ஆபாச படம்; அதிர்ந்த நீதிபதிகள்.!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now, Vote Vibe கருத்துக் கணிப்பில் தகவல்..! - உற்சாகத்தில் தொண்டர்கள்!!
'தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி’ Times Now கணிப்பில் அதிரடி..!
TN Exit Poll Results :
TN Exit Poll Results : "ஆட்சியை தக்க வைக்கும் திமுக” சாணக்கியா Strategies கணிப்பு..!
Honda City Facelift: அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
அடி சக்க.! சூப்பரான கார் இன்னும் சூப்பரா மாறப்போகுது.! ஃபேஸ்லிஃப்ட்டில் ப்ரீமியமாகும் ஹோண்டா சிட்டி
Embed widget