மேலும் அறிய

அதிர்ந்த காஞ்சிபுரம்..! காமாட்சி அம்மன் கோவில் வெடிக்கப்பட்ட 30000 வால பட்டாசு..!

கோவிலின் ராஜகோபுரம் வாசலில் 30 ஆயிரம் அடி சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடினர்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், தீபாவளி பண்டிகையையொட்டி,  சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்துக்குள் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோவிலின் ராஜகோபுரம் வாசலில் 30 ஆயிரம் அடி சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடினர்
 
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அமாவாசையின் போது, கடவுள்களை வழிப்பட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு சென்று பலகாரங்களை பரிமாறி கொள்கின்றன. புதிய ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டிற்குள் தீபங்களும், வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றியும் தீபாவளியை கொண்டாடுகின்றன.

அதிர்ந்த காஞ்சிபுரம்..! காமாட்சி அம்மன் கோவில்  வெடிக்கப்பட்ட 30000 வால பட்டாசு..!

களைகட்டும் தீபாவளி:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீபாவளிக்கான தேதிகள் மாறுபடும். இந்தநிலையில், இன்று நாடுமுழுவதும் நவம்பர் 12ம் தேதியான இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு புதிதாக திருமணமானவர்கள் தங்களது மாமியார் வீட்டில் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தீபாவளி நாளான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதிர்ந்த காஞ்சிபுரம்..! காமாட்சி அம்மன் கோவில்  வெடிக்கப்பட்ட 30000 வால பட்டாசு..!

மகா சக்தி பீடங்களில் முதன்மையானது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயிலில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, உற்சவா் காமாட்சி நீலநிற பட்டு உடுத்தி, மல்லிகை, மனோரஞ்சித மாலைகள் மற்றும் திருவாபரணங்கள் அணிந்தும் கோயில் நுழைவு வாயிலுக்கு எழுந்தருளினாா். அங்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் 30 ஆயிரம் வாலா சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னா், கோயில் வளாகத்துக்குள் ஸ்ரீலட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தீபாவளியை ஒட்டி, திரளான பக்தா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.
 
காஞ்சி காமாட்சி வரலாறு

காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகைய பெருமைகளை தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள்.

பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும் முனிவர்களும் கீழே ஒரு வடிவத்தில் இருந்த பராசக்தியே சந்தித்த முறையிட்டனர்.

அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார். அதற்காக காத்திருந்தபோது ஒரு தருணத்தில், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
Breaking News LIVE: கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா ரனாவத் வழிபாடு
Breaking News LIVE: கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா ரனாவத் வழிபாடு
PM Modi VIP Security : மோடி 3.0 அதிரடி.. கருப்பு பூனை கமாண்டோ படை இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடாது
மோடி 3.0 அதிரடி.. கருப்பு பூனை கமாண்டோ படை இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடாது
நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.
நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin Plan : தள்ளிப்போன உதயநிதியின் பட்டாபிஷேகம்! ஸ்டாலின் பக்கா பிளான்Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!Senji Masthan Vs Ponmudi | செஞ்சி மஸ்தானுக்கு கல்தா! பொன்முடி HAPPY அண்ணாச்சி! அலறவிட்ட ஸ்டாலின்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandrababu Naidu: ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
ஆந்திர முதலமைச்சராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு - பவன் கல்யாண் துணை முதலமைச்சர்?
Breaking News LIVE: கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா ரனாவத் வழிபாடு
Breaking News LIVE: கோவை: ஈஷா யோகா மையத்தில் நடிகை கங்கனா ரனாவத் வழிபாடு
PM Modi VIP Security : மோடி 3.0 அதிரடி.. கருப்பு பூனை கமாண்டோ படை இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடாது
மோடி 3.0 அதிரடி.. கருப்பு பூனை கமாண்டோ படை இனி பாதுகாப்பு பணியில் ஈடுபடாது
நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.
நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் : மேட்டூர் அணையில் புதைந்திருந்த வரலாற்று அதிசயம்.
Mohan : தோழிகள் ஷோபா, சில்க் ஸ்மிதா பற்றி மோகன் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்..
Mohan : தோழிகள் ஷோபா, சில்க் ஸ்மிதா பற்றி மோகன் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்..
மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்ட கோனூர்நாடு அகத்தீஸ்வர சுவாமி கோயில்
மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்ட கோனூர்நாடு அகத்தீஸ்வர சுவாமி கோயில்
IND Vs USA, T20 Worldcup: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி? ஷாக் கொடுக்குமா அமெரிக்கா? - இன்று பலப்பரீட்சை
IND Vs USA, T20 Worldcup: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி? ஷாக் கொடுக்குமா அமெரிக்கா? - இன்று பலப்பரீட்சை
Rasipalan: மிதுனத்துக்கு நன்மை, கடகத்துக்கு சுகம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மிதுனத்துக்கு நன்மை, கடகத்துக்கு சுகம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Embed widget