மேலும் அறிய

ஆன்மீகம்: ‘கோவிந்தா.. கோவிந்தா..’ சிறப்பாக நடந்த சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

விழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கோவிந்தா கோசங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றன. இதனால் கோவில் கோபுரங்கள் புதுப்பொலிவு பெற்றன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!

ஆன்மீகம்: ‘கோவிந்தா.. கோவிந்தா..’ சிறப்பாக நடந்த சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

அப்போது புண்யாக வாஜனம், மகா சுதர்சனஹோமம், பாலபூஜை, வாஸ்து பூஜை என பல்வேறு பூஜைகளும், மறுநாள் விஸ்வரூப சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 3-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. அன்றைய தினம் மதியம் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலச பூஜை நடைபெற்றது. அதன்பிறகு மாலையில் 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மூலமந்திரம், காயத்ரி மந்திரம் நடைபெற்றது.இந்தநிலையில் நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது.

Bhim Army Chief Shot: பீம் ஆர்மி தலைவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கோழைத்தனமானது - முதலமைச்சர் ஸ்டாலின்
ஆன்மீகம்: ‘கோவிந்தா.. கோவிந்தா..’ சிறப்பாக நடந்த சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித தீர்த்தங்கள் அடங்கிய குடங்கள் மங்கள இசை வாத்தியத்துடன் புறப்பாடாகியது. அப்போது பக்தர்கள் கோவிந்தா என்ற கோவிந்த நாமம் பாட பட்டாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை எடுத்துக்கொண்டு கோபுர கலசங்கள் உள்ள பகுதிக்கு சென்றனர். பின்னர் மூலவர் சன்னதியின் ராஜகோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தில் பட்டாச்சாரியார் பச்சை கொடியை அசைக்க சரியாக 9.30 மணி அளவில் அனைத்து கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆன்மீகம்: ‘கோவிந்தா.. கோவிந்தா..’ சிறப்பாக நடந்த சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. இதையொட்டி கோவிலில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் திருக்கல்யாண உற்சவமும், இரவில் கருட வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget