Karur Mariamman Temple: கண்களை காக்கும் கண்கண்ட தெய்வம் கரூர் மாரியம்மன்; ஆடி வெள்ளி கிழமைகளில் குவியும் பெண்கள்
Karur Mariamman Temple Dharmapuri: கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு அம்மன் கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை கண்களில் தெளித்தால் உடனடியாக பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நீக்கி சுபம் பெற வைக்கும் கரூர் மாரியம்மனை காண பக்தர்கள் நாடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சனஹள்ளி பஞ்சாயத்து உட்பட பகுதியில் கரூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அதியமான் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் பூவாக்கு உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் குழந்தை பாக்கியம் பெற வேண்டியும், கிணறு வெட்டவும், புதிதாக நிலம் வாங்கவும், திருமணம் தடைகள் விலகி நல்ல கணவன் அமையவும், வேலைவாய்ப்பு பெற என அனைத்திற்கும் அம்மனிடம் பூவாக்கு கேட்டு கேட்டபின் அம்மன் அனுமதியுடன் அதனை செய்கின்றனர்.
மேலும் அம்மனின் மிகவும் பிரசித்தி பெற்ற விஷயமாக கண்களுக்கு ஏற்படும் காயங்கள் தண்ணீர் வடிதல் உள்ளிட்ட பல்வேறு கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு அம்மன் கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை கண்களில் தெளித்தால் உடனடியாக பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதனால் இதற்காகவே திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் உடலில் உள்ள மருக்கள் மறைய உப்பு, மிளகு, ஆமணக்கு, வெள்ளம் உள்ளிட்டவை சேர்த்து அம்மன் மடியில் வைத்தால் அவை மறைந்து பிணி தீர்ந்துவிடும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மிக முக்கிய பரிகாரநகளாகவும் வழங்கி வருகிறது. இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் வேண்டிய வேண்டுதல்கள் வெற்றியுடன் முடிந்தவுடன் அம்மனுக்கு பொங்கலிட்டு ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி விடுகின்றனர்.
இதில் கோவிலுக்கு வருவதற்காக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து பி அக்ரஹாரம் வழியாக, 13 என்ற அரசு பேருந்து நேரடியாக கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இங்கு கண் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் குழந்தை வரம், திருமண தடை, தீராத நோய்கள், கடன் பிரச்சனை, தொழில் விருத்தி, உள்ளிட்டவை நீங்க வேண்டுதல் வைத்து பின் அனைத்தும் தங்குதடையின்றி அம்மன் நிறைவேற்றிக் கொடுப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.