December 2025: கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ், வைகுண்ட ஏகாதசி.. டிசம்பர் மாதம் எந்த தேதியில் என்னென்ன விசேஷம்?
December 2025 Festival: டிசம்பர் மாதத்தில் எந்தெந்த நாளில் என்னென்ன விசேஷங்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

December 2025 Festival: 2025ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் முக்கியமான விசேஷ நாட்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
விசேஷ நாட்கள்:
டிசம்பர் 1 - ஏகாதசி - திங்கள்
டிச.2 - பிரதோஷம் - செவ்வாய்
டிச. 3 - பரணி தீபம், கார்த்திகை தீபம், பெளர்ணமி - புதன்
டிச. 7 - சங்கடஹர சதுர்த்தி - ஞாயிறு
டிச. 15 - ஏகாதசி - திங்கள்
டிச. 16 - சபரிமலை நடை திறப்பு - செவ்வாய்
டிச. 17 - பிரதோஷம் - புதன்
டிச. 18 - மாத சிவராத்திரி - வியாழன்
டிச. 19 - அமாவாசை - வெள்ளி
டிச. 21 - சந்திர தரிசனம் - ஞாயிறு
டிச. 22 - சோமவார விரதம் - திங்கள்
டிச. 23 - திருவோண விரதம் - செவ்வாய்
டிச. 24 - சதுர்த்தி விரதம் - புதன்
டிச.25 - கிறிஸ்துமஸ் - வியாழன்
டிச. 26 - சஷ்டி விரதம் - வெள்ளி
டிச.27 - மண்டல பூஜை - சனி
டிச. 30 - வைகுண்ட ஏகாதசி - செவ்வாய்
முக்கிய பண்டிகைகள்:
இந்த மாதத்தில் மிகவும் முக்கியமான நாட்களாக கார்த்திகை தீபம், சபரிமலை நடை திறப்பு, கிறிஸ்துமஸ், வைகுண்ட ஏகாதசி ஆகியவை உள்ளது.
கார்த்திகை தீபம் திருநாள் மிகப்பெரிய பண்டிகையாக இந்து மார்க்கத்தினர் மத்தியில் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இந்த நன்னாளில் திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படுவது வழக்கம். இந்த விசேஷம் நாளை மறுநாள் நடக்கிறது.
வரும் 16ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் அலைமோதி வரும் சூழலில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுப்பார்கள். வரும் 27ம் தேதி மண்டல பூஜையும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவர்களின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை மிகப்பெரிய திருவிழாவாக கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டின் இறுதியான வரும் டிசம்பர் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.





















