மேலும் அறிய
Advertisement
Kanchipuram: செல்வ விநாயகா ஆலயம் மகா கும்பாபிஷேகம்...ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்..!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சாமி நகர் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா ஆலயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சாமி நகர் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா ஆலயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா ஆலயம் ( selva vinayakar temple kanchipuram )
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலிங்கப்பட்டறை அருகே சின்னசாமி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா ஆலயம் புதிதாக கட்டப்பட்டு வந்தன. இது திருக்கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்கள் புதிதாக அமைக்கப்பட்டது.
மஹா பூர்ணாஹதி தீபாரதனை
இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது.
புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம
அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தொழில்நுட்பம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion